தியாகதீபம் Lt. Col. திலீபன் 36 வருடங்களின்முன் சில கோரிக்கைகள் முன்வைத்து தமிழ்தேசியத்திற்காக, தமிழ்தேசிய இனத்தின் விடுதலைவேட்கையை உலகறியச் செய்யவும் உலகின் மனச்சாட்சியை தட்டும் நோக்கிலும் உண்ணா நோண்பிருந்து தன் உயிரை ஆகுதியாக்கினார். அவர் நோன்பிருந்னந்த அந்த நாட்களை தமிழர்தாயகமெங்குமுணர்வெழுச்சியுடன் வருடாவருடம் கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில் பொத்துவில் தொடங்கி வடக்குநோக்கி நகர்ந்த நினைவு ஊர்தி திருமலை ஊடாக செல்லும்போது சிங்கள காடையர்களாலும் புலனாய்வாளர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட ஏனைய உணர்வாளர்களை காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறி கொண்டு தாக்கியதை தமிழர் உரிமைக்கான குழுமம் வன்மையாக கண்டிக்கிறது.
அமைதி முறையில் நாம் எமது உறவுகளின் இழப்பை நினைவுகூரகுடியாமலுள்ள ஒரு நாட்டில், தமிழ்மக்கள் எப்படி தமது உரிமைகளை பெற்று கௌரவத்துடன் சுயமரியாதையுடனும் வாழமுடியும் என்ற வினாவை சர்வதேசத்தின்முன் வைக்கிறோம்.
எனவேதான் இந்த சிங்கள பௌத்த பேரினவாதிகளையும் அவர்தம் அரசையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழ் மக்களது வேண்டுகோளை இந்த சர்வதேசத்தின்முன் வைக்கின்றோம்.
எமது விடுதலை எமது கையில்!
__________________________________________________________________________________________________________________________________________________________________________
For all enquiries: Katpana Nagendra, General Secretary and Spokesperson | katpana@tamilrightsgroup.org | + 1 (778) 870-5824