April 12, 2022
For Immediate Release
Markham, Canada – The current political crisis and the peoples uprising in Sri Lanka have caught the attention of the world in recent days. The Sri Lankan citizens on ground are calling on President Gotabaya Rajapaksa and his 225-member legislature to step down, with the expectation that a regime change will salvage the country. However, in a televised address to the nation yesterday evening, the Prime Minister Mahinda Rajapaksa – who is the former President and a brother of the current President – not only made it clear that the ruling Rajapaksa family will not be giving up power but also proceeded to make ominous references to how anti-government protests have been suppressed in the past.
While undoubtedly the economic mismanagement, entrenched corruption, and the downturn in tourism caused by the COVID-19 pandemic can all be attributed toward precipitating this crisis, one of the major underlying factors has been the vast and unjustified military spending used to oppress the Tamil people and the devastation caused by the 26-year long war that has contributed to the decimation of growth and stability in Sri Lanka.
The Tamil Rights Group (TRG) wishes to highlight to the world the following as major underlying causes among others for Sri Lanka’s present crisis.
- The total military spending by the Sri Lankan Government from 1983 to 2020 has been a staggering USD 33.76 Billion. This total amount constitutes of USD 14.91 Billion spent during the war period of 1983 to 2009 and then the USD 18.85 Billion spent during the period of 2010 to 2020, an increase even after the military conflict had ended.
- Even for 2022 before the dire state of the economy was fully exposed, the government had proposed a defence budget of USD 1.86 Billion for 2022, a 14% increase over the allocation for 2021. This plan was contained in the appropriation bill for 2022 (as presented to parliament during October) and according to the bill would have accounted for 15% of total expenditure.
- The total capacity of the Sri Lankan military is over 300,000, with active personal deployed being around 255,000. This capacity makes the Sri Lankan military the 17th largest in the world, bigger than countries such as Japan, Mexico, Ukraine, France, Iraq, Germany, Israel and UK.
The war perpetrated on the Tamils ravaged Sri Lanka’s environment, economy and physical and social infrastructure, with the cost of the 26-year war being estimated at USD 200 Billion. (Note: The above data is from reliable reports attributed to World Bank, Janes, World Population Review and studies done by Asian Development Bank and other economic institutes in Asia.)
The situation in Sri Lanka is so desperate with people suffering without food, fuel, electricity and medicines, the Sinhalese masses are turning out on the street in unprecedented numbers for the first time to protest vehemently against the President and Government that, earlier today, began defaulting on its foreign debt payments. They are demanding his resignation and a regime change which they think will resolve the problems. While TRG stands in solidarity with these people suffering in all parts of the island, we want to highlight the fact that inflicting grave sufferings on people is not a new phenomenon for this government. Successive Sri Lankan governments, including the ones led by the Rajapaksa brothers, have subjected the Tamil people continuously to severe oppression and hardships, perpetrating untold atrocity crimes including genocide of the Tamils for decades. Even after more than 12 years have past since the end of the military conflict which culminated with the mass killings of Tamils through the “Mullivaikkal massacre”, the Tamils are continuing to be persecuted by the security forces who are conducting a de-facto military occupation of their traditional homeland in the North and East of the island.
As such the current uprising and unrest in the island nation was something expected. As a group advocating for Tamils’ rights in the island of Sri Lanka, the TRG urges all the Tamil politicians on ground and all the organisations in the Diaspora, to be vigilant at this critical time and join hands to take combined action as required to ensure that any steps being taken to resolve this crisis are built upon a solid foundation and political reform that will deliver a just resolution to the Tamil national question.
In this context, we also emphasize that the current crisis in Sri Lanka is one that, the successive governments of the island nation have precipitated since independence in 1948, through anti-Tamil government policies, incitement of hatred, human rights violations, corruption, and mismanagement of public funds. The need to find this just resolution is now extremely urgent, due to the authoritarian and corrupt rule by a president militarising civilian functions and bringing Sri Lanka to this desperate financial crisis, which may push the country irretrievably into the hands of powers employing coercive diplomacy. This is not only creating a disastrous scenario for the future wellbeing of everyone in Sri Lanka, but also creating a serious threat to the security and stability of the region.
TRG urges the Tamils and the international community to stand in unison, in calling on the governments of India, the QUAD nations and other institutions such as IMF to suspend any planned aid programs to Sri Lanka; until effective measures to address the following critical issues are negotiated and implemented prior to the commencement of any rescue program in Sri Lanka.
- Accountability for surrenderers to the Army.
- Demilitarisation with immediate withdrawal of troops from the North and East.
- Immediate halt to land grabs and return of all confiscated land to the Tamils.
- Repeal of the Prevention of Terrorism Act (PTA).
- Immediate release of all political prisoners detained and convicted under the PTA.
- Recognize Tamils’ Right to Self-determination and initiate dialogue with stakeholders to find a just political solution for the Tamil National Question with guarantees of non recurrence under the auspices of India and the international community.
- Ensure that as part of the resolution, the respective government must agree to an International Criminal Tribunal of Sri Lanka to progress justice for the victims of atrocity crimes in Sri Lanka, including Transitional justice and institutional reforms based on guarantees of non-recurrence.
We also call upon the UN bodies and the international community to fulfil their obligations of Responsibility to Protect (R2P) under the UN Charter and take immediate action to prevent any brutal crackdowns on the protesting masses by the Government and Armed Forces of Sri Lanka.
For all media enquiries: Katpana Nagendra, + 1 (778) 870-5824 / [email protected]
(Featured image courtesy of Tamil Guardian)
தாயக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் மக்கள் எழுச்சி ஆகியவை அண்மைய நாட்களில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆட்சி மாற்றம் நாட்டைக் காப்பாற்றும் என்ற எதிர்பார்ப்புடன், களத்தில் உள்ள இலங்கைப் பிரஜைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் அவரது 225 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தையும் பதவி விலகுமாறு கோரி நிற்கின்றனர். எவ்வாறாயினும், நேற்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியின் சகோதரருமான பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆளும் ராஜபக்ச குடும்பம் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காது என்பதை தெளிவுபடுத்தியது மட்டுமல்லாமல், மேலும் கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் எவ்வாறு நசுக்கப்பட்டன என்பது பற்றிய அச்சுறுத்தற் தொனியுடன் தனது உரையினைத் தொடர்ந்தார்
சந்தேகத்திற்கு இடமின்றி பொருளாதார முறைகேடு, வேரூன்றிய ஊழல், மற்றும் கோவிட்-19 தொற்றினால் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட பின்னடைவு ஆகிய அனைத்தும் இந்த நெருக்கடிக்கான காரணமாகக் கூறப்பட்டாலும், தமிழ் மக்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் பரந்த மற்றும் நியாயமற்ற இராணுவச் செலவுகள் முக்கிய அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இருப்பதுடன்,இலங்கையின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் அழிவுக்கு 26 வருடகால யுத்தத்தினால் ஏற்பட்ட அநர்த்தங்களும் காரணமாயுள்ளன..
தமிழர் உரிமைக் குழுமம்(TRG) இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணங்களாக பின்வரும்வற்றை உலகிற்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
- 1983 முதல் 2020 வரை இலங்கை அரசாங்கத்தின் மொத்த இராணுவச் செலவு 33.76 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்த மொத்தத் தொகையானது 1983 முதல் 2009 வரையிலான போரின் போது செலவழிக்கப்பட்ட 14.91 பில்லியன் அமெரிக்க டொலர்ககள், உட்பட, இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் அதிகரித்திருக்கும். 2010 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில் செலவழிக்கப்பட்ட 18.85 பில்லியன் அமெரிக்க டொலர்களுமாகும்.
- 2022 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் மோசமான நிலை முழுமையாக வெளிப்படுவதற்கு முன்பே, அரசாங்கம் 2022 ஆம் ஆண்டிற்காக 1.86 பில்லியன் அமெரிக்க டொலர் பாதுகாப்புச் செலவின ஒதுக்கீட்டை முன்மொழிந்துள்ளது, இது 2021 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டை விட 14% அதிகமாகும். இச் செலவின ஒதுக்கீடு கடந்த அக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு மசோதாவில் உள்ளடக்கபட்டு இருந்தது இம் மசோதாவின் படி, இவ்வாறு உள்ளடக்கப்பட்ட செலவினமானது, மொத்த செலவினத்தில் 15% இருக்கும்.
- இலங்கை இராணுவத்தின் மொத்த எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருப்பதுடன், அதில் இயங்கு நிலை வீரர்களின் எண்ணிக்கை சுமார் 255,000 ஆக உள்ளது. இதன்படி இலங்கை இராணுவம் உலகின் 17வது பெரிய இராணுவமாக இருப்பதுடன், இந்த எண்ணிக்கையானது. ஜப்பான், மெக்சிகோ, உக்ரைன், பிரான்ஸ், ஈராக், ஜேர்மனி, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளினது இராணுவங்களை விட அதிகமாக உள்ளது.
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர், இலங்கையின் சுற்றுச்சூழல், பொருளாதாரம் உட்கட்டுமானம் மற்றும் சமூக உட்கட்டமைப்பைச் சீரழித்தது, இந்த 26 ஆண்டுகால யுத்தத்தின் செலவினம் 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. (குறிப்பு – மேற்படி தரவுகள், உலக வங்கி சார்ந்து சமர்ப்பிக்கப்பட்ட நம்பகத்தன்மையான அறிக்கைகள், ஜேன்ஸ் உலக சனத்தொகை ஆய்வு, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆசியாவின் ஏனைய பொருளாதார நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.)
உணவு, எரிபொருள், மின்சாரம் மற்றும் மருந்துகள் இன்றி மக்கள் தவிக்கும் நிலையில் இலங்கையின் நிலைமை மிகவும் அவநம்பிக்கையானதாயுள்ளது, இன்று வெளிநாட்டுக் கடனை செலுத்தத் தவறிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகச் சிங்கள மக்கள், முதல் தடவையாக வீதியில் இறங்கி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதியின் பதவி விலகினால் ஏற்பட்டுள்ள அவல நிலைக்குத் தீர்வு காணலாம் எனும் எண்ணப்பாட்டில், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.TRG, நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் துன்பப்படும் இந்த மக்களோடு நிற்கும் அதே வேளையில், மக்களைப் பாரதூரமான துன்பங்களுக்கு உள்ளாக்குவது இந்த அரசாங்கத்திற்குப் புதிய விடயம் அல்ல என்பதை முன்னிலைப்படுத்த விரும்புகிறது.
ராஜபக்ச சகோதரர்கள் தலைமையிலான அரசாங்கங்கள் உட்பட அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் அனைத்தும், தொடர்ச்சியாக தமிழ் மக்களை கடுமையான ஒடுக்குமுறை மற்றும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளதுடன், பல தசாப்தங்களாக அட்டூழியக் குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றையும் தொடாச்சியாக நிகழ்த்தி வந்திருக்கின்றன. தமிழர்களின்முள்ளிவாய்க்கால் படுகொலைகள் மூலம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாகியும், நடைமுறையில் இராணுவ ஆக்கிரமிப்புகளை நடத்தும் பாதுகாப்புப் படையினரால் இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அவர்களின் பாரம்பரிய தாயகத்திற் தமிழர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்..
அந்தவகையில் இலங்கைத் தீவின் தற்போதைய எழுச்சியும் அமைதியின்மையும் எதிர்பார்த்த ஒன்றுதான். இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் உரிமைகளுக்காக வாதிடும் ஒரு குழுவாக, இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் தமிழர் தேசியப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கும் உறுதியான அடித்தளம் மற்றும் அரசியல் சீர்திருத்தத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், களத்தின் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்துத் தமிழ் அமைப்புகளும், இந்த இக்கட்டான நேரத்தில் விழிப்புடன் இருந்து, தேவையான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கைகோர்க்குமாறும் TRG கேட்டுக்கொள்கிறது.
இந்தச் சூழலில், தற்போதைய நெருக்கடியானது, 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கையின் அரசுகள்; கடைப்பிடித்த, தமிழருக்கு எதிரான கொள்கைகள், வெறுப்பைத் தூண்டுதல், மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் மற்றும் பொது நிதியின் தவறான மேலாண்மை ஆகியவற்றின் விளைவுகளாகும். சிவில் செயல்பாடுகளை இராணுவமயமாக்கிய ஒரு ஜனாதிபதியின் சர்வாதிகார மற்றும் ஊழல் ஆட்சியின் காரணமாக, இலங்கை இந்த கையறு நிதி நெருக்கடிக்கு கொண்டு வரப்பட்டதற்கான, ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான தேவை இப்போது மிகவும் அவசரமானது. அது மட்டுமன்றி இந்நிலைமையானது வற்புறுத்தல் இராசதந்திரத்தைக் கைக்கொள்ளும் சக்திகளின் பிடிகளுக்குள் மீள முடியாத நிலக்கும் நாட்டைத் தள்ளிவிடும். இது இலங்கையில் உள்ள அனைவரின் எதிர்கால நல்வாழ்வுக்கும் பேரழிவு தரும் சூழ்நிலையை உருவாக்குவது மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை உருவாக்குகிறது.
தமிழர்களும் சர்வதேச சமூகமும் ஒருமித்து நிற்க வேண்டுமென TRG வலியுறுத்துகிறது. இந்தியா, QUAD நாடுகள் மற்றும் IMF போன்ற பிற நிறுவனங்கள் இலங்கைக்கெனத் திட்டமிடப்பட்ட எந்தவொரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் பின்வரும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பயனுள்ள நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அதன் பின் நடைமுறைப்படுத்தப்படும் வரை அவ்வாறான உதவித் திட்டங்களை இடைநிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
1. இராணுவத்திடம் சரணடைந்தவர்களுக்கான பொறுப்புக்கூறல்.
2. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து படைகளை உடனடியாக வெளியேற்றுவதன் மூலம் இராணுவமயமாக்கலை இரத்துச் செய்தல்.
3. நில அபகரிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, அபகரிக்கப்பட்ட அனைத்து நிலங்களையும் தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
4. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குதல்.
5. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தண்டிக்கப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்தல்.
6. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தின் அனுசரணையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு உத்தரவாதத்துடன் நியாயமான அரசியல் தீர்வைக் காண உரிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குதல்.
7. ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு தீர்மானத்தின், ஒரு பகுதியாக, நிலைமாறுகால நீதி மற்றும் குற்றங்கள் மீண்டும் நிகழாத உத்தரவாதங்களின் அடிப்படையில் நிறுவன சீர்திருத்தங்கள் உட்பட இலங்கையில் அட்டூழியக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை முன்னெடுக்க இலங்கையை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு எடுத்துச் செல்ல அந்த அரசாங்கம் உடன்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும்.
இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதப் படைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது எந்தவொரு மிருகத்தனமான ஒடுக்குமுறையையும் எடுக்காதிருப்பதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என ஐ.நா அமைப்புகளையும், சர்வதேச சமூகத்தையும், ஐ.நா. சாசனத்தின்டி (R2P) கீழ் உள்ள தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு, நாங்கள் அழைக்கிறோம்