September 13, 2022
For Immediate Release
Markham, Canada – Today, Tamil Rights Group (TRG), on behalf of International Communities Organisation (ICO), made an intervention by video under Item 2 – General Debate on the Oral Update by the High Commissioner at the 51st regular session of the United Nations Human Rights Council.
Speaking for ICO, Katpana Nagendra, TRG’s Secretary and Spokesperson, shared the concerns reflected in the recent comprehensive report on Sri Lanka by the UN High Commissioner for Human Rights, which highlighted the exacerbated human rights violations and recommendations on efforts that will assist in advancing accountability and transitional justice in the island. As part of the intervention, ICO and TRG urged the UN Security Council to hold an urgent debate on the human rights situation in Sri Lanka and strategies to advance accountability at the international level.
Leading up to today’s intervention, TRG also provided comprehensive input into ICO’s written statement on Recommendations to reduce the risk of human rights violations and to ensure safety of Tamils, various ethnicities, and religions in Sri Lanka. The written statement, submitted on August 19, 2022, highlighted critical issues such as Constitutional framework; Severe economic consequences of war; Unaccomplished demilitarisation process; Enforced or involuntary disappearances; Land grabs, illegal confiscations, and cultural destruction; Intimidation and persecution through torture, rape, and sexual abuse; and Administration of justice including impunity, and the rule of law.
The key recommendations made by ICO, in consultation with TRG, include:
- Providing technical assistance and capacity-building for Sri Lankan institutions and civil society to address alleged corruption at government level and implement transparent laws.
- Appointing a Special Rapporteur on the Human Rights Council to ensure continued documentation of human rights violations and crimes against humanity and preservation of information that may be used in future accountability processes.
- Increasing diplomatic pressure on Sri Lanka to ratify the Rome Statute of the International Criminal Court (ICC) to ensure accountability for mass atrocities and alleged genocide.
- Calling on the UN Security Council to hold an urgent debate on the situation of human rights in Sri Lanka and strategies to advance accountability at the international level (especially at the International Criminal Court, which TRG has campaigned for since November 2021).
- Implementing the recommendations of Investigation on Sri Lanka (2015) (5), particularly the creation of an Ad Hoc Hybrid Special Court.
- Investigating the possibility of programmes that will support civil society and institutions to address social, cultural, and economic challenges with innovative and local solutions.
TRG will continue to work closely with stakeholders, including collaborating with other human rights advocacy organisations and Tamil diaspora groups, to ensure that a strong resolution on Sri Lanka is passed at the current session.
For all media enquiries: Katpana Nagendra | + 1 778 870-5824 | [email protected]
உடன் வெளியீட்டிற்காக
புரட்டாதி 13, 2022
இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து அவசர விவாதம் நடத்தக் கோரி, தமிழர் உரிமைக் குழுமம் (TRG) மற்றும் சர்வதேச சமூகங்களின் அமைப்பு (ICO) ஆகியன ஐ.நா பாதுகாப்புச் சபையை வலியுறுத்துகின்றன
மார்க்கம் கனடா – இன்றைய தினம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 51வது வழமையான கூட்டத்தொடரின், நிகழ்ச்சி நிரற் பிரிவு 2ன் கீழ் வரும் பொது விவாதத்தில், மனித உரிமைகள் உயர் ஆணையரின், வாய்மொழி மேல் விளக்கம் (Oral Update) தொடர்பில் காணொளி மூல உள்ளீடொன்றினைச் சர்வதேச சமூகங்களின் அமைப்பு சார்பாகத் தமிழர் உரிமைக் குழுமம் செய்தது.
தமிழர் உரிமைக் குழுமத்தின் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான கற்பனா நாகேந்திரா, சர்வதேச சமூகங்களின் அமைப்புக்காக பேசுகையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான சமீபத்திய விரிவான அறிக்கையில், நிலைமாறுகால நீதி உட்பட பொறுப்புக்கூறுல் ஆகியவற்றை முன்நகர்த்தல் மற்றும் இலங்கைத் தீவில் தீவிரமடைந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்துப் பிரதிபலிக்கப்பட்டிருந்த, உயர் ஆணையரின் கவலைகளையும், பகிர்ந்து கொண்டார். சர்வதேச சமூகங்களின் அமைப்பு மற்றும் தமிழர் உரிமைக் குழுமம், ஆகியவற்றினது உள்ளீட்டின் ஒரு பகுதியாக, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மற்றும் பொறுப்புக் கூறலை சாவதேச மட்டத்தில் முன்னகர்த்துவதற்கான உத்திகள் குறித்து அவசர விவாதத்தை நடத்துமாறு ஐ.நா பாதுகாப்புச் சபை வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும், தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான பரிந்துரைகளை உள்ளடக்கி, இன்றைய உள்ளீட்டிற்கு வழிவகுக்கும் வகையில், சர்வதேச சமூகங்களின் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல அறிக்கைக்க்கான விரிவான உள்ளீட்டையும், தமிழர் உரிமைக் குழுமம் வழங்கியது. ஆவணி 19, 2022 அன்று சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல அறிக்கையானது, இலங்கையின்; அரசியல் யாப்பின் கட்டமைப்பு, போரினால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார விளைவுகள், நிறைவேற்றப்படாத இராணுமய நீக்கச் செயல்முறை, கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது விருப்பமில்லாமல் காணாமல் ஆக்கப்பட்டோர்; நில அபகரிப்பு, சட்டவிரோத பறிமுதல் மற்றும் கலாச்சார அழிவு; சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மூலமான மிரட்டல், துன்புறுத்தல்; மற்றும் தண்டனையின்மை உட்பட நீதி நிர்வாகம், மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற முக்கியமான சிக்கல்களை முன்னிலைப்படுத்தியது.
தமிழர் உரிமைக் குழுமத்துடனான கலந்தாலோசனையின் பின் சர்வதேச சமூகங்களின் அமைப்பு வழங்கிய முக்கிய பரிந்துரைகள்:
- அரசாங்க மட்டத்தின் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றஞ்சாட்டுக்களை நிவர்த்தி செய்வதற்கும் வெளிப்படையான சட்டங்களை அமுல்படுத்துவதற்குமான திறனைக் கட்டியெழுப்புவதற்கு, இலங்கையின் சிவில் சமூகத்திற்கும், நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப உதவி வழங்கல்.
- எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் பயன்படுத்தப்படுத்தப்படக்கூடிய தகவல்களைப் பாதுகாத்தல்,மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை தொடர்ந்து ஆவணப்படுத்துவதை உறுதி செய்வதற்காக மனித உரிமைகள் பேரவையில் ஒரு சிறப்பு அறிக்கையாளரை நியமித்தல்.
- இலங்கை மீது சுமத்தப்பட்டுவரும் பாரிய அட்டூழியக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம சாசனத்தை அங்கீகரிக்கும்படி இலங்கை மீது இராஜதந்திர அழுத்தங்களை அதிகரித்தல்.
- சர்வதேச மட்டத்தில் ( குறிப்பாக; தமிழர் உரிமைக் குழுமம், 2021 கார்த்திகை மாதம் முதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரப்புரை செய்து வருவது போல்,) இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை மற்றும் பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்கான உத்திகள் குறித்து அவசர விவாதத்தை நடத்த ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அழைப்பு விடுத்தல்.
- (2015) (5), ன் பிரகாரம் இலங்கை மீதான விசாரணையின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல்; குறிப்பாகத், தற்காலிக, சிறப்புக் கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குதல்.
- சிவில் சமூகம் மற்றும் நிறுவனங்கள், புதிய முறைகள் மற்றும் உள்ளூர் தீர்வுகளுடன் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளூதற்கு ஆதரவளிக்கும் திட்டங்களின் சாத்தியத்தை ஆராய்தல்.
நடப்பு அமர்வில் இலங்கை மீது ஒரு வலுவான தீர்மானத்தை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக, மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பிற அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புளுடன் ஒத்துழைப்பது உட்பட, ஏனைய பங்குதாரர்களுடன் தமிழர் உரிமைக் குழுமம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்.