October 14, 2022
For Immediate Release
Markham, Canada – On October 6, 2022, the UN Human Rights Council (UNHRC) voted on A/HRC/51/L.1/Rev.1 – Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka at the now concluded 51st General Session, with 20 member states voting in favour of the resolution, seven against it, and 20 abstaining.
While efforts to keep Sri Lanka accountable at the UNHRC is welcome, the Tamil Rights Group (TRG) remains gravely concerned that the Council has not been able to progress stronger action to address the consistent appeal by Eelam Tamils living in the traditional Tamil homelands on the island as well as the global diaspora to recommend the referral of Sri Lanka to the International Criminal Court (ICC) for the war crimes, crimes against humanity, and genocide perpetrated against the Tamil people. While the resolution also recognises Sri Lanka’s current severe economic crisis and the need to investigate and prosecute corruption, it needs to be understood by the international community that a fundamental root cause for this deep crisis is the decades long ethnic conflict with the atrocity crimes and the cruel war on Tamils which inevitably led to the decimation of the economy. It has also allowed for exacerbated human rights violations specifically against Eelam Tamils to continue more than a decade after the end of the armed conflict, with unprecedented military spending and heavy militarisation leading to abuse and intimidation, enforced disappearances, torture, rape and sexual violence, land grabs, cultural vandalism, and forced colonisation of the traditional Tamil areas with the backing of state machinery.
TRG firmly believes that all possible actions under international law and human rights principles must be pursued following the recent UNHRC session in order to progress tangible justice and accountability for the Eelam Tamil people. In this regard, the TRG also welcomes the comprehensive report from the UN High Commissioner for Human Rights and the progress being made by the OHCHR Sri Lanka Accountability Project team to collect evidence of international crimes in Sri Lanka. The resolution passed at this session includes the provision to extend and reinforce the evidence collection mechanism for the next two years, an important move that will help to progress future justice and accountability actions, sending a clear warning to the alleged perpetrators of these heinous crimes.
The recently concluded 51st General Session also marks TRG’s inaugural campaign at the UNHRC as part of a month-long engagement with member states and civil society organisations, UN officials, fellow Tamil activists from Eelam and around the world, and elected officials from the island’s Northern and Eastern provinces.
Amongst TRG’s efforts at this session, it:
- Provided comprehensive input into a written statement submitted on August 19 by the International Communities Organisation on Recommendations to reduce the risk of human rights violations and to ensure safety of Tamils, various ethnicities, and religions in Sri Lanka.
- Was cited in the UN High Commissioner’s Comprehensive Report released in advance of the session on September 6, for its Article 15 Communication to the Prosecutor of the International Criminal Court in November 2021 as a “development[] … to advance accountability”.
- Made a video intervention on behalf of the International Communities Organisation on September 13, under Item 2 – General Debate on the Oral Update by the High Commissioner, urging the UN Security Council to hold an urgent debate on the human rights situation in Sri Lanka and strategies to advance accountability at the international level.
- Co-organized an NGO-parallel event with Tourner La Page and Global Tamil Movement on September 29, International Crimes and the International Criminal Court, and specifically outlining the strategy and recommendations being advanced by TRG in relation to the ICC.
“The 51st General Session of the UN Human Rights Council has afforded the Tamil Rights Group the opportunity to gain significant experience in our own advocacy journey. From understanding how the UNHRC operates to becoming connected to key decision makers and working alongside fellow diaspora and homeland-based activists in pursuit of justice and accountability for our people, we consider our inaugural delegation to the Council to be a great success especially given our limited resources. This experience has also reinforced our fundamental belief that the truth of the genocide of the Tamil people in Sri Lanka will ultimately prevail on the basis of advocating for accountability, transitional justice, protecting civil liberties on the island, and establishing universal jurisdiction to hold the Sri Lankan state accountable, no matter how long it takes.”
– Navararatnam Srinarayanathas, President, Tamil Rights Group
For all media enquiries: Katpana Nagendra | + 1 778 870-5824 | [email protected]
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது பொது அமர்வினைத் தொடர்ந்து தமிழர் உரிமைக் குழு, ஈழத் தமிழர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முந்நகர்த்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது
உடன் வெளியீட்டிற்காக
ஐப்பசி 14, 2022
மார்க்கம், கனடா – இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் பற்றிய தீர்மானமான A /HRC/51/L.1/Rev.1ல் நடந்து முடிந்த 51வது பொது அமர்வில், அக்டோபர் 6, 2022 அன்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவை (UNHRC) வாக்களித்தது. 20 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், ஏழு நாடுகள் எதிராகவும், வாக்களித்த நிலையில் 20 நாடுகள் வாக்களிக்காமல் நடு நிலைமை வகித்தன.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கதெனினும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டும் என்ற பாரம்பரிய தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத் தமிழர்களினதும் புலம் பெயர் தமிழர்களினதும் தொடர்ச்சியான கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்கான வலுவான நடவடிக்கையை சபையால் முன்னெடுக்க முடியவில்லை
இந்தத் தீர்மானம் இலங்கையின் தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலை விசாரித்து வழக்குத் தொடர வேண்டியதன் அவசியத்தையும் அங்கீகரிக்கும் அதே வேளையில், பல தசாப்தங்களாக நடந்த அட்டூழியக் குற்றங்களுடனான இன மோதலும் தமிழர்கள் மீதான கொடூரமான போருமே தவிர்க்க முடியாதபடி, பொருளாதாரச் சீரழிவிற்கு வழிவகுத்த இந்த ஆழமான நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்பதையும் சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அது மேலும், ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்து ஒரு தசாப்தம் கழிந்த பின்பும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், முன்னொரு போதுமில்லாத வகையிலான இராணுவச் செலவுகள், கடுமையான இராணுவமயமாக்கல், துஷ்பிரயோகம், அச்சுறுத்தல், வலிந்து காணாமலாக்கப்படுதல்கள், சித்திரவதைகள், கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகள் நில அபகரிப்பு, கலாச்சார சீரழிவு, மற்றும் பாரம்பரிய தமிழர் பகுதிகளில் அரச இயந்திரத்தின் ஆதரவுடன் பலவந்த குடியேற்றம் ஆகியன தீவிரமடைவதற்கு வழிவகுத்துள்ளது.
சமீபத்திய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வைத் தொடர்ந்து, ஈழத் தமிழ் மக்களுக்கான உய்த்துணரக்கூடிய நீதி, மற்றும் பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்கு, சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைக் கோட்பாடுகளின் கீழ் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்று தமிழர் உரிமைக் குழு உறுதியாக நம்புகிறது.
இந்த வகையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் விரிவான அறிக்கை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் (OHCHR), இலங்கைக்கான பொறுப்புக்கூறல் திட்டக் குழு, இலங்கையில் நடந்த சர்வதேச குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதில் அடைந்துவரும் முன்னேற்றத்தையும் தமிழர் உரிமைக் குழு வரவேற்கிறது.
இந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாட்சியச் சேகரிப்பு பொறிமுறையை நீடித்தலையும் வலுப்படுத்துதலையும் உள்ளடக்கியுள்ளதுடன், எதிர்கால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னேற்ற உதவும் ஒரு முக்கியமான நகர்வாகவும், இந்தக் கொடூரமான குற்றங்களை இழைத்த குற்றவாளிகளுக்குத் தெளிவான எச்சரிக்கையாகவும் உள்ளது.
உறுப்பு நாடுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா அதிகாரிகள், ஈழம் மற்றும் உலகெங்கிலும் உள்ள சக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இலங்கைத்தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோருடனான ஒரு மாத கால ஈடுபாட்டின் ஒரு பகுதியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) தமிழர் உரிமைக் குழுவின் கன்னிப் பரப்புரையையும் சமீபத்தில் முடிவடைந்த 51வது பொது அமர்வு, குறிக்கிறது. இந்த அமர்வில் தமிழர் உரிமைக் குழுவின் முயற்சிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தன:
- மனித உரிமை மீறல்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும், இலங்கையில் தமிழர்கள், மற்றும் பல்வேறு இனங்கள் மதங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான பரிந்துரைகளுடன் சர்வதேச சமூகங்கள் அமைப்பினால் ஆகஸ்ட் 19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல அறிக்கையின் விரிவான உள்ளீட்டை வழங்குதல்.
- 2021 கார்த்திகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 15வது பிரிவின் கீழ் அதன் வழக்கறிஞரிடம் அனுப்பி வைக்கப்பட்ட தொடர்பாடல், பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்கான வளர்ச்சிப்படி என செப்டம்பர் 6ம் திகதிய அமர்வுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட ஐ.நா. உயர் ஆணையரின் விரிவான அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.
- நிகழ்ச்சி நிரல் அலகு, 2 இனது பொது விவாதத்தில் – உயர் ஸ்தானிகரின் வாய்வழிப் புதுப்பிப்பு மீதான, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மற்றும் ஐ.நா. பாதுகாப்புச் சபையை அவசர விவாதம் நடத்த வலியுறுத்துதல் சர்வதேச அளவில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான உத்திகள் பற்றி புரட்டாதி 13 அன்று சர்வதேச சமூகங்கள் அமைப்பின் சார்பாக காணொளி வழி உள்ளீடு செய்தல்.
- செப்டம்பர் 29 அன்று டூர்னர் லா பேஜ் மற்றும் குளோபல் தமிழ் மூவ்மென்ட், ஆகியவற்றுடனான இணை நிகழ்வில், சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றுடன், விசேடமாக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பாக தமிழர் உரிமைக்குழு முன்வைக்கும் உத்தி மற்றும் பரிந்துரைகளை குறிப்பிட்டுக் காட்டியமை.
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது பொதுக் கூட்டத்தொடர் தமிழர் உரிமைக் குழுவுக்கு எமது பரப்புரைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதில் இருந்து, முக்கிய முடிவெடுப்பவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் சக புலம்பெயர் அமைப்பினர் மற்றும் தாயகத்தை சார்ந்த ஆர்வலர்களுடன் இணைந்து நமது மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலைப் பெறுவது வரை, அறிந்து கொள்வதில் எமக்கிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் மனித உரிமைகள் சபையில் எமது பிரதிநிதிகள் குழுவின் கன்னிப் பிரசன்னம் ஒரு பெரு வெற்றியாக அமைந்த்து என்றே கருதுகிறோம். எத்துணை காலம் சென்றாலும் இலங்கைத் தீவில்,பொறுப்புக்கூறல், நிலைமாறுகால நீதி, சிவில் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் இலங்கையைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான சர்வதேச நியாயாதிக்கத்தைத் தாபித்தல் ஆகியவற்றின் அடிப்படையில்,தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் உண்மை, இறுதியில் வெற்றிபெறும் என்ற எங்கள் அடிப்படை நம்பிக்கையையும் இந்த அனுபவம் வலுப்படுத்தியுள்ளது. “
– நவரத்தினம் சிறீ நாராயணதாஸ், தலைவர், தமிழர் உரிமைக் குழுமம்
தமிழ் ஊடக விசாரணைக்கு: கற்பனா நாகேந்திரா, செயலாளரும் பேச்சாளரும்| [email protected], + 1 (778) 870-5824