அன்னைத்தமிழுக்கு பழிநேர்ந்தால் உனக்கில்லையோ?
இறக்கை விரித்துப்பறந்த செந்தமிழ் காக்கமானிடனின் முதல் மொழிகாக்க
பொங்கிப்பெருகும் தங்கத்தமிழின் ஈழத்தாய்த்திருநாட்டைக்காத்துநின்ற வீரமைந்தரின் திருநாளன்றோ இன்று!
நாத கீத ராக பாவம் யாம் பெறவே ஈழத்தமிழ்க் குடிமக்கள் மனம்போல குடியாட்சி அமைக்க நமக்காக தம்முயிரைக் கொடுத்த மாவீரரே உம்நாளல்லோ இன்று!
நிம்மதியாய் நாம் தூங்க இராப்பகலாய் கண்விழித்துக்காத்திருந்து தம்மையே தியாகம் செய்த காவலரின் நாளன்றோ இன்று!
சுயநலம் விடுத்து நம்நலம் காக்க தம்மையே பலிகொடுத்த மாவீரச்செல்வங்களின் நாளன்றோ இன்று!
“நான்கு பக்கமும் மரணம் சூழ்ந்த போதும் தாயகம் பிரியேன், தாய்மண்ணில் மரிப்பேன்” என்று வீரமுழக்கம் செய்த மேதகு தேசீயத்தலைவனின் சொல்லுக்கிண்ங்க, வீரமண்ணில்ப்பிறந்து, வீரராய் வாழ்ந்து, வீரதீரராய் உயிர்நீத்த நம் இணையற்ற செல்வங்களின் உன்னத நாளன்றோ இன்று1
நெஞ்சிலே வீரமுரசு கோட்ட, தாய்த்திருநாட்டைக்காத்து நின்று, சங்கருடன் சங்கமமான மாவீரத்தியாக தீபங்கள் மறைந்த நாளல்ல, கொழுந்து விட்டு எரிந்த நாளல்லோ இன்று!
கார்த்திகை மாதத்தின் இந்நாளில் கண்ணீர் ஆறாய்ப்பெருக நம் மாவீரத்தியாகிகட்கு தீபமும், தூபமும் காட்டி வாழ்க நம் மாவீரர் எனப்பறை சாற்றி நிற்கிறோம்!
ஈழத்தமிழ் மண்ணின் மைந்தர் நீவிரடா இந்த மண்ணே உங்கள் தாயடா.
எமது விடுதலை எமது கையில்!