For Immediate Release
December 18, 2023
Markham, Canada – On November 9, 2021, Tamil Rights Group (TRG), in collaboration with the International Tamil Refugee Assistance Network (I-TRAN), submitted a Communication under Article 15 of the Rome Statute to Office of the Prosecutor of the International Criminal Court (ICC), requesting a preliminary examination into crimes against humanity of deportation and persecution committed against Eelam Tamils within the territories of state parties to the ICC.
Since the initial submission, TRG and its legal advisors, including David Matas, Sarah Teich, Hannah Taylor, and Michael Polak, for this matter have been in discussions with the Office of the Prosecutor about its submission and the legal arguments contained therein. On December 1, 2023, TRG met in person with the preliminary examinations team in the Office of the Prosecutor in the Hague, Netherlands for a comprehensive discussion of the jurisdictional legal issues that will be contained in an additional follow up submission that is currently being prepared.
There is mounting evidence that the Eelam Tamil population in Sri Lanka were subjected to atrocities that amounted to crimes against humanity and war crimes, particularly in the final stages of the protracted civil war that ended in 2009. Recognizing that the ongoing actions of the Sri Lankan state have proven its unwillingness to investigate and prosecute such crimes within domestic judicial institutions, the United Nations Human Rights Commissioner, in January 2021, called for member states to become involved in working to end the impunity surrounding the Sri Lankan armed conflict, both by utilizing the principle of universal jurisdiction to initiate prosecutions in foreign domestic courts, and by taking steps toward seeking justice at the international level, including at the ICC.
Tamil Rights Group, along with many sections of the Tamil diaspora, is committed to pursuing all available legal avenues to hold the Sri Lankan state and individual perpetrators accountable for their crimes against the Eelam Tamil people. It is only on the basis of truth, justice, and accountability can any sincere efforts for social reconciliation, economic advancement, and political transformation can be meaningfully realized.
For all media enquiries: Katpana Nagendra, General Secretary and Spokesperson | [email protected] | + 1 (778) 870-5824
_____________________________________________________________________________________________________________________________
உடன் வெளியீட்டிற்காக
டிசம்பர் 18, 2023
இலங்கை மீதான வழக்கு பற்றிக் கலந்துரையாடுவதற்காக தமிழர் உரிமைக் குழுமம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர் அலுவலகத்தை சந்தித்தது
மார்க்கம், கனடா – நவம்பர் 9, 2021 அன்று, தமிழர் உரிமைக் குழுமம் (TRG), தமிழ் அகதிகளுக்கான சர்வதேச உதவி வலையமைப்புடன் (I-TRAN) இணைந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பினை ஏற்றுக் கொண்டுள்ள உறுப்பு நாடுகளின் எல்லைகளுக்குள் ஈழத் தமிழருக்கெதிராக நடாத்தப்பட்ட, நாடு கடத்தல் மற்றும் துன்புறுத்தல் போன்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய பூர்வாங்க பரிசீலனை ஒன்றினைக் கோரும் ஆவணத்தொகுப்பு ஒன்றை ரோம சாசனத்தின் 15 வது பிரிவின் கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர் அலுவலகத்திடம் சமர்ப்பித்திருந்தது.
முதலாவது ஆவணத்தொகுப்பு சமா்ப்பிக்கப்பட்டதிலிருந்து, அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சட்ட வாதங்கள் பற்றிய ஆய்வுகளில் தமிழர் உரிமைக் குழுமம் மற்றும் அதன் சட்ட ஆலோசகர்களான டேவிட் மேற்றாஸ், சேரா டீச், ஹனா டெய்லர் மற்றும் மைக்கல் போலக் ஆகியோர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர் அலுவலகத்துடன் கலந்துரையாடி வந்துள்ளனர்.
முன்னைய சமா்ப்பணங்களின் தொடர்ச்சியாகத் தற்போது தயாராகி வரும் ஆவணங்களில் அடக்கப்படவுள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சட்டச் சிக்கல்கள் பற்றிய விரிவான கலந்தாய்விற்காக, டிசம்பர் 1, 2023 அன்று, நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர் அலுவலகத்தில், பூர்வாங்க பரிசீலனைக் குழுவினரைத் தமிழர் உரிமைக் குழுமத்தினர் நேரில் சந்தித்தனர்.
2009ம் ஆண்டு இலங்கையில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில், குறிப்பாக அதன் இறுதிக்கட்டத்தில், ஈழத்தமிழ் மக்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகிய அட்டூழியங்களுக்கு ஆளானார்கள் என்பதற்குப் பெருகிவரும் ஆதாரங்கள் உள்ளன.
உள்நாட்டு நீதித்துறை இத்தகைய குற்றங்களை விசாரிப்பதற்கும், வழக்குத் தொடர்வதற்குமான விருப்பமின்மையை இலங்கை அரசின் தொடர் நடவடிக்கைகள் நிரூபித்துள்ளன என்பதனை இனங்கண்டு, சர்வதேச அளவில் நீதியைத் தேடும் படிகளாக, சனவரி 2021 இல், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், சர்வதேச குற்றவியல் நீதிமன்று உள்ளடங்கலாகவும், உலகளாவிய அதிகார வரம்பு என்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி, வெளிநாடுகளின் சுதேச நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்வதன் மூலமும், இலங்கை ஆயுத மோதலைச் சுற்றியுள்ள தண்டனையின்மைக்கு முடிவு கட்டும் பணியில் உறுப்பு நாடுகள் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
தமிழர் உரிமைக் குழுமம் , புலம்பெயர் தமிழர்களின் பல பிரிவுகளுடன் இணைந்து, இலங்கை அரசும் மற்றும் தனிநபர் குற்றவாளிகளும், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்துள்ள குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வைப்பதற்கு இருக்கக்கூடிய அனைத்துச் சட்ட வழிகளையும் தொடர்வதற்கு உறுதி பூண்டுள்ளது.
உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே, சமூக நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் அரசியல் மாற்றத்திற்கான எந்தவொரு நேர்மையான முயற்சியும், அர்த்தமுள்ளதாக எட்டப்படும்.
எமது விடுதலை எமது கையில்!
அனைத்து ஊடக விசாரணைகளுக்கும்: கற்பனா நாகேந்திரா, பொதுச்செயலர் |778-870-5824 | [email protected]