For Immediate Release
October 2, 2023
Markham, Canada – On September 25, 2023, Katpana Nagendra of Tamil Rights Group (TRG) appeared as an expert witness before the House of Commons Standing Committee on Foreign Affairs and International Development to provide TRG’s recommendations on further enhancing Canada’s sanctions regime.
“Mr.Chair and honourable members of the committee, thank you for the opportunity to testify as part of the panel of witnesses in this study of Canada’s sanctions regime.
Tamil Rights Group (TRG) is a not-for-profit human rights organization acting globally to support Eelam Tamils. We relentlessly pursue means to uphold human rights through global diplomacy, together with legal avenues available under international law and human rights principles. In November 2021, TRG submitted a major Communication under Article 15 of the Rome Statute to the International Criminal Court (ICC) requesting a preliminary examination into crimes against humanity committed against Eelam Tamils within territories of states parties to the ICC.
Canada recently imposed sanctions related to Sri Lanka under the Special Economic Measures Act in “response to the gross and systematic violations of human rights occurring in the country.” Sanctioned under SEMA were four Sri Lankan state officials who were responsible for gross human rights violations which occurred during 1983 to 2009 and afterwards.
This was a great step in exposing the atrocity crimes, including genocide, that Tamils have been facing at least since 1948 and including the anti-Tamil pogrom of 1983, and most recently the 2009 Mullivaikaal massacre. Numerous Tamils, including women and children, and surrendered unarmed militants, were brutally murdered in this massacre and death toll estimates range anywhere from 40,000 to 150,000. I am here today not only as a representative of Tamil Rights Group but also as a victim of the 1983 riots which forced my family to migrate to Canada in 1985.
Today I would like to highlight TRG’s view on Canada’s sanctions regime and provide recommendations on how Canada can further strengthen the current regime. These recommendations are made in consultation with our legal advisors David Matas and Sarah Teich.
Our first recommendation centers around greater transparency and more involvement from civil society and NGOs. We feel that there should be a clear and formalized pathway for NGOs to communicate requests to implement sanctions. NGOs can also access a wide variety of evidence that can help outline chain of command and identify perpetrators of gross human rights violations. Global Affairs should be working more closely with our group and others in the identification of evidence and perpetrators to be sanctioned.
Second, more needs to be done to support justice efforts for Tamils, both in the form of additional sanctions, and additional accountability efforts through various international justice mechanisms.
This need is evident from realities on the ground. Sri Lankan officials continue to arbitrarily detain individuals under the draconian Prevention of Terrorism Act; there is a continued military presence in the North and East; and individuals are prevented from participating in peaceful demonstrations and acts of memorialization. Most recently, in the wake of alarming discoveries of multiple mass graves, the Sri Lankan government refuses to allow independent and international investigations and is wilfully destroying evidence.
These continued abuses highlight the need to expand the current sanctions. The vast majority of Sri Lankan officials with responsibility for gross human rights violations are still not held to account. Pervasive impunity encourages continued abuses. To combat this, sanctions must be extended to numerous additional personnel with responsibility for human rights violations, and any assets held by sanctioned individuals in Canada should be repurposed to compensate victims. Canada should also engage multilaterally to press for sanctions to be implemented in other jurisdictions. Further, Canada should be investigating how it may be inadvertently undermining its own sanctions regime by still providing funds to the Sri Lankan military through agencies like the IMF and World Bank.
Further, targeted sanctions on their own are not enough, and the utilization of the Magnitsky Act or SEMA is one tool among many that, when used in concert, may provide a meaningful measure of justice and accountability.
The utilization of international justice mechanisms is important. Sri Lanka and Canada are both states parties to numerous treaties, including the Genocide Convention and the Convention Against Torture, that enable the International Court of Justice to settle disputes. The International Criminal Court may open a preliminary examination into crimes against humanity committed against Tamils on the territories of state parties. Canada should work to support these and other initiatives.
We look forward to building on these engagements with this committee and would like to emphasize that the sanctions regime should be the first step in holding individuals accountable for gross violations. Canada needs to explore and implement additional measures as this was also the recommendation of the UNHRC High Commissioners’ comprehensive report in 2022 that cited TRG’s ICC submission.
On behalf of Tamil Rights Group, thank you and I look forward to your questions.”
For all enquiries: கற்பனா நாகேந்திரா, General Secretary and Spokesperson | [email protected] | + 1 (778) 870-5824
_______________________________________________________________________________________________________________________________________________________________________________
வெளியுறவு மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான நிலைக்குழு (FAAE) முன் TRGன் வாய்மொழி அறிக்கை
உடனடி வெளியீட்டுக்காக
அக்டோபர் 2, 2023
மாக்கம், கனடா – செப்டம்பர் 25, 2023 அன்று, தமிழர் உரிமைக்கான குழுமத்தின் (TRG) கற்பனா நாகேந்திரா, கனடாவின் பொருளாதாரத் தடைகளை மேலும் மேம்படுத்துவதற்கான TRGயின் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு நிபுணத்துவ சாட்சியாக வெளியுறவு மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான கனேடிய நாடாளுமன்றின் நிலைக்குழு முன் ஒரு நிபுணத்துவ சாட்சியாக ஆஜரானார். தொடக்க அறிக்கையை காணொளியின் 11:23 – 11:30 நிமிடங்களில் பார்க்கவும்.
“கமிட்டியின் தலைவர் மற்றும் கெளரவ உறுப்பினர்களே, கனடாவின் பொருளாதாரத் தடைகள் பற்றிய இந்த ஆய்வில் சாட்சிகள் குழுவின் ஒரு பகுதியாக சாட்சியமளிக்கும் வாய்ப்பிற்கு நன்றி.
தமிழர் உரிமைக்கான குழுமம் (TRG) என்பது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உலகளாவி செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற மனித உரிமைகள் அமைப்பாகும். உலகளாவிய ரீதியில் இராஜதந்திரம், சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைக் கோட்பாடுகளின் கீழ் கிடைக்கும் சட்ட வழிகளூடாக மனித உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான வழிமுறைகளை நாங்கள் இடைவிடாமல் பின்பற்றுகிறோம்.
நவம்பர் 2021 இல், TRGயானது றோம் சட்டவிதி 15 இன் கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) ஒரு முக்கிய தகவல்தொடர்பு ஒன்றை சமர்ப்பித்தது, இது ஐசிசியில் ஓப்பமிட்டுள்ள அரசுகளின் எல்லைகளுக்குள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய ஆரம்ப விசாரணையைக் கோரியுள்ளது.
“நாட்டில் நிகழும் திட்டமிடப்பட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில்” சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா சமீபத்தில் இலங்கை தொடர்பான தண்டனை-தடைகளை விதித்தது. 1983 முதல் 2009 வரையிலும் அதற்குப் பின்னரும் நடந்த கொடூர மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகள் SEMA இன் கீழ் தண்டனை-தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
1948 முதல் தமிழர்கள் எதிர்நோக்கி வரும் இனப்படுகொலை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களை அம்பலப்படுத்துவதில் இது ஒரு சிறந்த நடவடிக்கையாகும், இதில் 1983 தமிழர் விரோதப் படுகொலையும், மிக சமீபத்தய 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையும் அடங்கும். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான தமிழர்களும், சரணடைந்த
நிராயுதபாணியான போராளிகளும், இந்த படுகொலையில் கொடூரமாக கொல்லப்பட்டனர் இந்த இறப்பு எண்ணிக்கை 40,000- 150,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதியாக மட்டுமன்றி, 1985ஆம் ஆண்டு எனது குடும்பம் கனடாவிற்கு புலம்பெயரச் செய்த 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டவனாகவும் இன்று நான் இங்கு இருக்கிறேன்.
இன்று நான் கனடாவின் தண்டனை- தடைகள் ஆட்சியில் TRG இன் பார்வையை முன்னிலைப்படுத்த விரும்பி, அதன்பால் கனடா எவ்வாறு தற்போதைய ஆட்சியை மேலும் பலப்படுத்தலாம் என்பதற்கான பரிந்துரைகளை வழங்க விரும்புகிறேன். இந்த பரிந்துரைகள் எங்கள் சட்ட ஆலோசகர்களான David Matas, Sarah Teich ஆகியோருடன் கலந்தாலோசித்து செய்யப்பட்டன.
எங்களின் முதல் பரிந்துரையானது சிவில் சமூகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அதிக வெளிப்படைத்தன்மையையும் அதிக ஈடுபாட்டையும் மையமாகக் கொள்கின்றது.. தண்டனை-தடைகளைச் செயல்படுத்துவதற்கான கோரிக்கைகளை NGOகள் முன்வைப்பதற்கு தெளிவான மற்றும் முறைப்படுத்தப்பட்ட பாதை இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலவிதமான ஆதாரங்களை பெற்றுகொள்ளகூடியதாகவும், அதன்பால் சங்கிலி தொடரில் உயர்மட்ட அதிகாரிகளை /அரசியல்வாதிகளையும் கோடிட்டுக் காட்டவும், கொடூர மனித உரிமை மீறல் குற்றவாளிகளை அடையாளம் காண உதவகூடியதாகவும் அமையும். சாட்சியங்கள் மற்றும் குற்றசெயல்பாட்டாளர்களை அடையாளம்காண உலகவிவகார செயலகம் எங்கள் குழு மற்றும் பிறகுழுக்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.
இரண்டாவதாக, தமிழர்களுக்கான நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பதற்கு, கூடுதல் தண்டனை-தடைகள், மற்றும் பல்வேறு சர்வதேச நீதிப் பொறிமுறைகள் ஆகிய இரண்டின்மூலம் கூடுதல் பொறுப்புக்கூறல் முயற்சிகள் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும்.
இந்த தேவை எமது மண்ணிலுள்ள நிலைமைகளிலிருந்து தெளிவாகிறது. கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை அதிகாரிகள் தன்னிச்சையாக தனிநபர்களைத் தொடர்ந்து தடுத்து வைத்துள்ளனர்; வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ பிரசன்னம் உள்ளது; மற்றும் தனிநபர்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நினைவேந்தல் செயல்களில் பங்கேற்பதில் இருந்து தடுக்கப்படுகிறார்கள். மிக சமீபத்தில், ஆபத்தான பல பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இலங்கை அரசாங்கம் சுதந்திரமான மற்றும் சர்வதேச விசாரணைகளை அனுமதிக்க மறுத்து, ஆதாரங்களை வேண்டுமென்றே அழித்து வருகிறது.
இந்த தொடர்ச்சியான துஷ்பிரயோகங்கள் தற்போதைய தண்டனை-தடைகளை விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. கொடூர மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான இலங்கை அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் இன்னும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. பரவலான தண்டனையின்மை தொடர்ச்சியான துஷ்பிரயோகங்களை ஊக்குவிக்கிறது.
இதை எதிர்த்துப் போராள, மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான மேலும்பல அதிகாரிகளுக்கு பொருளாதாரத் தடைகள் விரிவாக்கபடல் வேண்டும், மேலும் கனடாவில் தண்டனை-தடைகள் விதிக்கபட்ட அதிகாரிகள் வைத்திருக்கும் சொத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். பன்னாட்டு குழு (multilateral) மூலம்பிற சட்டவலயங்களில் தண்டனை-தடைகளை செயல்படுத்த கனடா அழுத்தம் கொடுத்தலில் ஈடுபட வேண்டும். மேலும், கனடா சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற முகவர் நிலையங்கள் மூலம் இலங்கை இராணுவத்திற்கு நிதி வழங்குவதன் மூலம் தனது சொந்த தண்டனை-தடைகளை எவ்வாறு கவனக்குறைவாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதை ஆராய வேண்டும்.
மேலும், வெறுமனே குறித்தெடுத்த தண்டனை-தடைகள் போதுமானதாக இல்லாததால் வேற்று வழிகளில் ஒன்றாக Magnitsky சட்டம் அல்லது SEMA வினை ஒரு கருவியாக பயன்படுத்தலாம், அத்தோடு இவற்றை கூட்டாக பயன்படுத்தப்படும் போது நீதி மற்றும் பொறுப்புகூறல் அர்த்தமுள்ளவையாகலாம். சர்வதேச நீதி பொறிமுறைகளைப் பயன்படுத்துவது முக்கியமானது. இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் இனப்படுகொலை உடன்படிக்கை மற்றும் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை உட்பட பல உடன்படிக்கைகளில் ஒப்பமிட்டுள்ள நாடுகளாவதால் இது சர்வதேச நீதிமன்றம் (ICJ) சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஒப்பமிட்டுள்ள நாடுகளின் ஆட்சிப்பரப்புகளில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த பூர்வாங்க விசாரணையைத் தொடங்கலாம்.இவை மற்றும் பிற முயற்சிகளுக்கு ஆதரவளிக்க கனடா செயல்பட வேண்டும். இந்த நிலைக்குழுவுடன் இணைந்து ஈடுபாடுகளை உருவாக்க நாங்கள் எதிர்நோக்குவதோடு , மேலும் கொடூர சட்டமீறல்களுக்கு தனிநபர்களை பொறுப்புக்கூற வைப்பதில் தண்டனை-தடைகள் ஆட்சிமை முதல் படியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். TRG இன் ICC சமர்ப்பிப்பையும் மேற்கோள் காட்டியிருந்த 2022 இல் வெளியான UNHRC உயர் ஸ்தானிகர்களின் விரிவான அறிக்கையின் பரிந்துரையும் இதுவாக இருப்பதால் கனடா கூடுதல் நடவடிக்கைகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.
தமிழர் உரிமைக்கான குழுமம் சார்பாகநன்றி கூறி உங்கள் கேள்விகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”
எமது விடுதலை எமது கையில்!
கற்பனா நாகேந்திரா, பொதுச்செயலாளர்| [email protected], + 1 (778) 870-5824