For Immediate Release
October 4, 2023
Markham, Canada – District Judge Mr T. Saravanaraja from Mullaitivu in Sri Lanka has been forced to resign and flee the country due to the ominous threats to his life and intimidation from elected representatives and other officials in the country. In his letter of resignation which has now been published in the media, the esteemed judge who has recently ruled on cases relating to an ancient Tamil Hindu religious site in Kurunthurmalai and a remembrance event to commemorate Lt Col Thileepan, had written to the Sri Lanka Judicial Services Commission that he was resigning due to “threat to my life and due to lot of stress” forced upon him.
Tamil Rights Group (TRG) expresses grave concerns regarding the continued attempts in Sri Lanka to pervert the course of justice. TRG vehemently condemns this latest threat where a member of the judiciary performing his impartial duties to uphold the law has been targeted. This persecution furthers the aims of the majoritarian Sinhala – Buddhist state to marginalise the Tamil and Muslim people of the island.
Mr Saravanaraja was a senior judge and magistrate in the war torn Mullaitivu district, where Tamils are still suffering from the effects of the civil war and the atrocity crimes perpetrated against them by the Armed Forces and Governments of Sri Lanka (GoSL). As the Tamil citizens struggle to seek justice and accountability, the military occupation and exacerbated human rights violations continue in the North and East of Sri Lanka, including in Mullaitivu.
Some time ago, the Mullaitivu court with Judge Saravanaraja presiding had ordered the removal of all new construction, including the illegally built shrine on Kurunthurmalai, a hill top site that already contained an ancient Tamil Hindu temple, the revered Athi Aiyanar temple. Despite this court injunction, Sinhala Buddhist monks with the active help of the Archaeological Department continued to construct an illegal Buddhist shrine on the temple land, in blatant disregards of the law. Separate to the above ruling, Judge Saravanaraja had also visited a mass grave site in Kokkuthodavai, Mullaitivu district with the area police and ordered excavations. In this context, it should be noted here that the Kokkuthodavai site like many other mass graves that have been discovered are believed to contain bodies of Tamils killed extrajudicially, for which the GoSL has refused to conduct internationally supervised impartial investigations.
The independence of the judiciary together with the rule of law has been severely eroded in Sri Lanka. While Judge Saravanarajah has been hounded continuously through racist comments and disgraceful used parliamentary privilege to conduct personal attacks against him by MPs such as Sarath Weerasekera, he has also been subjected to severe intimidation and threats to life. Further, it has been reported that he was summoned by the Attorney General to his office on 21 September 2023 and that pressure was exerted on him to amend his judgments regarding the Kurunthurmalai case.
This type of intimidation and systematically planned action to pervert the course of justice is nothing new in Sri Lanka. This has been a strategy adopted by successive Sinhala-Buddhist majoritarian governments to allow the continued human rights abuses undertaken to marginalise and subjugate Tamils, driven by the majoritarian mindset that the country belongs to the Sinhala-Buddhist only.
“We appeal to the international community and fair-minded governments of this world to take appropriate action against Sri Lanka to end the entrenched impunity and use their influence to help restore justice and accountability in Sri Lanka.” – Navaratnam Srinarayanathas, President
For all enquiries: கற்பனா நாகேந்திரா, General Secretary and Spokesperson | [email protected] | + 1 (778) 870-5824
______________________________________________________________________________________________________________________________________________________________________________
உயிர் அச்சுறுத்தல்; காரணமாக மாவட்ட நீதிபதி ராஜினாமா – நீதித்துறையின் சுதந்திரத்தைத் தகாத முறையில் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கான பரந்த முயற்சிகள் பற்றிய இலங்கை மீதான பார்வை
உடனடி வெளியீட்டுக்காக
அக்டோபர் 4, 2023
மாக்கம், கனடா – இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், பிற அரச அதிகாரிகளிடமிருந்து எழுந்துள்ள உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திரு டி.சரவணராஜா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குருந்தூர்மலையில் பண்டைய தமிழச் சைவ சமயத் தலம் தொடர்பான வழக்கு மற்றும் லெப்டினன்ட் கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான மனு, ஆகியவற்றிற்கு சமீபத்தில்; தீர்ப்பு வழங்கியிருந்த மதிப்பிற்குரிய நீதிபதி, “எனது உயிர் மீதான அச்சுறுத்தல் மற்றும் அதீத மன அழுத்தம்” காரணமாக எனது பதவியிலிருந்து விலகுகிறேன்; என்று இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள பதவி விலகல் கடிதம் ஊடகங்களில் வெளிவந்;துள்ளது
தொடர்ச்சியாக நீதியின் போக்கைத் திசைதிருப்புவதற்கு இலங்கையில் இடம்பெறும் முயற்சிகள் குறித்து தமிழர் உரிமைக்கான குழுமம் (ரி.ஆர்.ஜி) தனது கடுமையான விசனத்தை வெளிப்படுத்துகிறது.
சட்டத்தை நிலைநிறுத்துவதற்காகப் பாரபட்சமற்ற வகையில் தனது கடமைகளைச் செய்யும் நீதித்துறையின் உறுப்பினர் ஓருவர் மீது, இலக்கு வைக்கப்பட்டுள்ள இந்த சமீபத்திய அச்சுறுத்தலை ரி.ஆர்.ஜி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தத் துன்புறுத்தல் இலங்கைத் தீவில் தமிழ் மற்றும் முஸ்லீம்களை ஓரங்கட்டுவதற்கான பெரும்பான்மை சிங்கள – பௌத்த அரசின் நோக்கங்களை மேலும் முந்நகர்த்திச் செல்கிறது.
உள்நாட்டுப் போரின் விளைவுகளாலும் இலங்கையின் ஆயுதப்படைகள் மற்றும் அரசாங்கங்களால் (புழளுடு) இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களாலும்; தமிழ் மக்கள் இன்னும் அவதிப்பட்டுக்கின்றதும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டதுமான முல்லைத்தீவு மாவட்டத்தில் மூத்த நீதிபதியாகவும், நீதவானாகவும் இருந்தவரே திரு சரவணராஜா ஆவார்.
நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமாகத், தமிழ் மக்கள் போராடிவரும் நிலையிலும், முல்லைத்தீவு உட்பட. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அதிகரித்த மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன.
சில நாட்களுக்கு முன் நகர்த்திச் – ஏற்கனவே பண்டைய சைவத் தமிழ்க் கோவிலான, ஆதி ஐயனார் கோவில் அமைந்திருந்த குருந்தூர் மலையின் உச்சியில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோவில் உட்பட அனைத்துப் புதிய கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டுமென்று, நீதிபதி சரவணராஜா தலைமையில் முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.;
இந்த நீதிமன்றத்; தடை உத்தரவு இருந்த நிலையிலும், சட்டத்தை அப்பட்டமாகப் புறக்கணித்து, தொல்பொருள் திணைக்களத்தின் உச்சபட்ச உதவியுடன் கோவில் நிலத்தில். சிங்கள பௌத்த பிக்குகள் சட்டவிரோத புத்த விகாரை கட்டுமானத்தைத் தொடர்ந்தனர்.
மேற்படி தீர்ப்பு தவிர, நீதிபதி சரவணராஜா, கொக்குதொடுவாயில் உள்ள மனிதப் புதைகுழிக்கு முல்லைத்தீவு மாவட்ட பொலிஸாருடன் சென்று அகழ்வுப் பணிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பல பாரிய மனிதப் புதைகுழிகளைப் போலவே கொக்குத்தொடுவாய்ப் பாரிய மனிதப் புதைகுழிகளும், சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்ட தமிழர்களின், உடல்களைக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பில் இலங்கை அரசு சர்;வதேச கண்காணிப்புடனான பாரபட்சமற்ற விசாரணைகளைச் செய்ய மறுத்துவருகிறது, என்பதும், இலங்கையில், நீதித்துறையின் சுதந்திரமும், சட்டத்தின் ஆட்சியும் வலுவாக நலிந்து போயுள்ளது என்பதும், இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
கடுமையான அச்சுறுத்தல்களுக்கும் உயிர் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ள நீதிபதி சரவணராஜா, இனவாதக் கருத்துக்கள் மூலம் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டுள்ளார்.
சரத் வீரசேகர போன்ற, இலங்கை அரசவை உறுப்பினர்கள், அவருக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவதற்குப் பாராளுமன்ற சிறப்புரிமையை கீழ்த்தரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், 2023 செப்டெம்பர் 21ஆம் திகதி சட்டமா அதிபரின் அலவலகத்திற்கு அழைக்கப்பட்ட நீதிபதியிடம் குருந்தூர்மலை தொடர்பான அவரது தீர்ப்புகளை மாற்றி எழுத வேண்டும் எனச் சட்டமா ஆதிபரால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான மிரட்டல் மற்றும் நீதியின் போக்கை சிதைக்க திட்டமிடப்படுகின்ற நடவடிக்கை ஒன்றும் இலங்கையில் புதியது அல்ல. இது மனித உரிமைகளை மீறவும்; தமிழர்களை ஓரங்கட்டி அடிபணிய வைக்கவும், இலங்கை சிங்கள-பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற பெரும்பான்மை மனப்பான்மையால் உந்தப்பட்டு, சிங்கள-பௌத்த பெரும்பான்மை அரசாங்கங்களால் தொடர்ச்சியாகப் பின்பற்றப்படும் ஒரு உத்தியாகும்
இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மீட்டெடுக்கவும், அங்கு ஆழமாக வேரூன்றியிருக்கும்தண்டனையிலிருந்து தப்பித்தலை முடிவுக்குக் கொண்டு வரவும், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகம் மற்றும் இந்த உலகின், நியாயமான எண்ணம் கொண்ட அரசாங்கங்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். – நவரத்தினம் சிறீ நாராயணதாஸ், தலைவர்
எமது விடுதலை எமது கையில்
கற்பனா நாகேந்திரா, பொதுச்செயலாளர்| [email protected], + 1 (778) 870-5824