மறப்பானா தமிழன் முள்ளிவாய்க்காலை உயிர் உள்ளவரை!
தமிழர் இதயத்தில் ஆறாத்துயரைக்ககொடுத்தது முள்ளிவாய்க்கால்;
நம்வலியை எப்படித்தான் உணர்த்துவது உலகுக்கு;
–
உண்ணவழியின்றி உலர்ந்துமடிந்த நாட்கள் எத்தனை;
நம் மூரைக்கரைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை ?அவர்கள்
எங்கேயென்று கேட்டோம், கண்டது கண்ணீர் மட்டுமே.
சேயைக்காக்க தவித்த தாயின் வேதனை உணர்ந்தோம்,
தாயின் மடியில் மழலையின் அபலக்குரல் கேட்டோம்,
மரணத்தைத்தேடியோடிய நம் வயோதிபரையும் கண்டோம்,
வீதியெங்கும் செங்குருதி பார்த்தோம், கம்பியின் மறுபக்கம்
எம்செல்லச்சிறுவர்கள் கெடுக்கப்பட்டு மடியும் கதையும் கேட்டோம்,
காத்தவனைக்காக்கும் பணியில் மாவீரர் பலர் மரித்தும் மறைந்தானோ
காவலன்;
–
எதை இழந்தும் எம்தமிழ்த்தாயின் உணர்வை இழக்கவில்லையேயாம்;
உலகைக்கெஞ்சினோம், சட்டநீதி கோரினோம்,சமூக நீதியும் கேட்டோம்,
கிடைத்தது ஏமாற்றம் மட்டும்தான்; கொலைகாறர்கள் எத்தனைபேர்,
ஆட்சியை ஆண்டவனில் இருந்து அனைவரும் துரோகிகளே; இருந்தும்
தொடர்கிறது தமிழ் இனஅழிப்பு;
–
ஈரேழு வருடங்களில் எத்தனை மாற்றங்கள்! மன்னாரில் மண்மறைய,
சிவனை மறைத்து புத்தர் தோன்ற, பாவம் புத்தர்,சிவனுடன் போட்டி.
ஈழத்தில் தமிழனுக்கு மட்டுமா சோதனை, இறைவனுக்குமே சோதனை
தான்:
–
எம்முயிரை அழிக்கலாம், அழிக்கமுடியுமா உலகின் மூத்த தமிழை,
முடியுமா தமிழரின் சுதந்திரதாகத்தையும் வேட்கையையும் நகர்த்த.
–
மறைந்தவன் தோன்றிட ஏங்கித்தவிக்கிறது தாயகம்;
ஈசனின் நண்பனும், திலகமிட்ட மாமனும் துணைநிற்க வேலவன்
முன்செல்ல, அம்மனவள் சீற்றம் கொள்ள மறைந்தவன் தோன்றினால்
வேங்கைகளும் சீறிப்பாயும், நந்தியும் கொந்தளிக்கும்,
நந்தி கொந்தளிக்க வாய்க்கால் கரைபுரண்டோட இரத்தக்கறை முளையாகி
வேர்விட்டு மரமாக தாய்த்தமிழும் சிறகடிக்கும்.
–
வீரத்தமிழர்களே வெந்துபுலம்பும் காலமல்ல இது, வீறுகொண்டெழுந்து
அன்னியனை விரட்டித்தமிழ்த்தாயை காக்கும் காலமிது.
–
தாய்த்தமிழே வருகிறோம் உனைமீட்க.
–
எமது விடுதலை எமது கையில்!