For Immediate Release
January 4, 2021
Markham, Canada – A week ago, the Tamil Rights Group (TRG) wrote to the Prime Minister of Canada as well as the Foreign Minister and the Attorney General of Canada, registering its serious concerns about the potential appointment of Air Chief Marshal Sumangala Dias as Sri Lanka’s next envoy to Canada.
Based on a legal opinion prepared by one of Canada’s leading human rights lawyers, David Matas, C.M. and assisted by Sarah Teich, TRG requested that the Government of Canada notify the Government of Sri Lanka that Air Marshal Dias would be unacceptable and unwelcome, persona non grata. TRG has also further requested the Government of Canada to initiate an investigation to determine whether further restrictive measures are warranted against him pursuant to the Magnitsky Act. The legal opinion makes a case for criminal command responsibility by Air Marshal Dias for war crimes, crimes against humanity, and genocide, as well as his violation of the standards of the Commonwealth Charter, especially as the civil war in Sri Lanka drew to a close in May 2009.
Tamil Rights Group (TRG) is a newly established international not-for-profit organisation, headquartered in Markham, Canada, that seeks to further strengthen advocacy efforts for transitional justice and accountability for the Tamils of Lanka through international law measures, expanded global diplomacy, and defending their civil liberties within Sri Lanka. To this new chapter, TRG brings together a multigenerational team, deep networks within civil society in the traditional homelands and across the diaspora, and activists directly connected to the struggle for Tamil rights since the early 1970s.
____
Katpana Nagendra, Secretary and Spokesperson
[email protected] | + 1 (778) 870-5824
வான்படை அதிகாரி சுமங்கள டயஸ் கனடாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு எதிராக தமிழர் உரிமைக்கான குழுமம் (Tamil Rights Group) கனேடிய அரசிற்குச் சட்டக் கருத்துரை வழங்கியுள்ளது
உடனடி வெளியீட்டுக்கு
4 தை 2021
மார்க்கம், கனடா – கனடாவிற்கான, இலங்கையின் அடுத்த தூதுவராக வான்படை அதிகாரி சுமங்கள டயஸ் நியமிக்கப்படும் சாத்தியம் தொடர்பாக தனது தீவிரமான கரிசனங்களை தமிழர் உரிமைக்கான குழுமம் கடந்த வாரம் கனேடிய பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சருக்கும், சட்ட மாஅதிபருக்கும் எழுத்துமூலம் தெரிவித்தது.
கனடாவின் முன்னணி மனித உரிமைகள் சட்டவல்லுனர்களான டேவிட் மற்றாஸ், சேரா ற்றைக் ஆகியோரின் சட்டக் கருத்தின் அடிப்படையில், சுமங்களா டயஸ் கனடாவிற்கு ஏற்புடையவரோ வரவேற்கப்படக்கூடிய நபரோ அல்லர் என கனேடிய அரசானது இலங்கை அரசிற்குத் தெரிவிக்க வேண்டும் என தமிழ் உரிமைகள் குழுமம் கோரிக்கை விடுத்தது. மேலும், மக்னிற்ஸ்கி சட்டத்தின்படி, அவருக்கு ஏதிராக மேலதிக தடையுத்தரவுகளை மேற்கொள்ளமுடியுமா என்பது பற்றிய ஆய்வையும் கனேடிய அரசு முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் உரிமைகள் குழுமம் விடுத்துள்ளது. தனது கட்டளையதிகாரம் மூலம் – குறிப்பாக இலங்கையில் போர் மே 2009ல் முடிவை அண்மித்த காலப்பகுதியில் – டயஸ் போர்க்குற்றங்களுக்கும், மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்கும், இன அழிப்புக்கும் பொறுப்பாகவிருந்ததோடு பொதுநலவாய சாசனத்தையும் மீறியுள்ளார் என சட்டக் கருத்துரை கருதுகிறது.
சட்டக் கருத்துரையை வாசியுங்கள்
தமிழர் உரிமைக்கான குழுமமானது மார்க்கம், கனடாவில் தலைமைச்செயலகத்தைக் கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு இலாபநோக்கற்ற நிறுவனமாகும். அது அனைத்துலக சட்ட நடவடிக்கைகள், அகண்ட உலகளாவிய இராஜதந்திர செயலாட்சி, இலங்கையிலே அரசியல் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய பொறிமுறைகள் ஊடாக, இலங்கையில் தமிழர்களுக்கான நிலைமாறுகால நீதிக்கும், பொறுப்புக்கூறலுக்குமான பரிந்துரைச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த முனைகிறது. இந்தச் செயற்பாட்டுக்காக, தமிழர் உரிமைக்கான குழுமமானது முதலாவது மற்றும் இளைய தலைமுறைகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களையும், தாயகத்தில் சமூக அமைப்புகளுடனும் புலத்தில் சமூக உரிமைச் செயற்பாட்டாளர்களுடனுமான வலுவான தொடர்புகளையும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் எழுபதுகளிலிருந்து தொடர்புபட்டிருந்த செயற்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்துள்ளது.
கற்பனா நாகேந்திரா, செயலாளரும் பேச்சாளரும்
[email protected] | + 1 (778) 870-5824