Decision comes as Eelam Tamils mark another year of occupation on Sri Lanka’s Independence Day
February 4, 2022
For Immediate Release
Markham, Canada –Following months of closely monitoring constitutional challenges of Ontario’s recently proclaimed Tamil Genocide Education Week Act, 2021, the Tamil Rights Group (TRG) is filing an application for leave to intervene in the matters of Sri Lankan Canadian Action Coalition et al. v. Her Majesty the Queen in Right of Ontario and Neville Hewage v. Attorney General of Ontario. The TRG will seek leave to make submissions that will be useful to the Court, which are different from those to be made by any other parties to this proceeding and that ultimately centers the perspectives of Eelam Tamils.
There are two constitutional challenges before the Court. Both the Sri Lankan Canadian Action Coalition challenge and the Hewage challenge argue that the Tamil Genocide Education Week Act, 2021 is unconstitutional, that the legislation violates the Charter of Rights and Freedoms, and that the Province of Ontario acted ultra vires when passing legislation that recognises the Tamil Genocide. TRG is seeking leave to intervene in both these related but separate matters.
“The newly enacted Ontario legislation is of great interest to Eelam Tamils and the global Tamil diaspora as it is arguably the first piece of international legislation that recognises that ‘acts of genocide’ against the Tamils started in 1948 after Sri Lanka gained its independence. As Sri Lanka celebrates its independence today, Eelam Tamils on the island remain a nation under occupation while the diaspora grapples with the inter-generational trauma caused by the Tamil genocide. Therefore it is important that we do everything we can to protect this legislation and the hardwork of the many community organisations that made it possible so that we can continue to educate Ontarians and all Canadians about the Tamil genocide and other genocides that have occurred in world history,” said Navaratnam Srinarayanathas, President, Tamil Rights Group.
Given the vital interest that Tamil Ontarians, therefore, have in this matter, TRG has retained Janani Shanmuganathan of Goddard & Shanmuganathan LLP, as counsel to seek leave to intervene in both these matters. Ms. Shanmuganathan is a criminal and constitutional lawyer. She has been counsel at the Supreme Court of Canada and has argued more than 40 appeals at the Ontario Court of Appeal. Outside of the courtroom, Ms. Shanmuganathan is an adjunct professor at Osgoode Hall Law School and is a frequent speaker at continuing legal education programs. Ms. Shanmuganathan has also won several awards for her advocacy, including being recognised amongst Canadian Lawyer’s Magazine Top 25 Most Influential Lawyers of 2021.
Those interested in supporting TRG’s intervention in these matters can contact Haran Viswanathan at [email protected].
எமது விடுதலை எமது கையில்!
For all media enquiries: Jaskaran Sandhu | + 1 647-990-8720 | [email protected]
உடன் வெளியீட்டுக்காக
மாசி 4, 2022
ஒன்ராரியோவின் தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டம், 2021ற்கு எதிரான அரசியலமைப்புச் சவால்களில் தலையிட தமிழர் உரிமைக்கான குழுமம் அனுமதி கோரவுள்ளது
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தன்று, ஈழத் தமிழர்கள், தம்மீதான ஆக்கிரமிப்பின் மேலுமொரு ஆண்டினை அனுட்டிக்கும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மார்க்கம் ஒன்ராரியோ – அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டம், 2021இற்கு எதிராக ஒன்ராரியோவின் அரசியலமைப்பின் மீது தொடுக்கப்பட்ட அரசியலமைப்புச் சவால்களை உன்னிப்பாகக் கண்காணித்ததைத் தொடர்ந்து, தமிழர் உரிமைக்கான குழுமம் (TRG), இலங்கைக் கனேடியர் நடவடிக்கைக் கூட்டமைப்புடன் ஏனையோர் எதிர் ஒன்ராரியோ மீது இருக்கும் அதிகாரத்தினால் மேன்மை தங்கிய மகாராணியார் மற்றும் நெவில் ஹேவகே எதிர் ஒன்ராரியோ சட்டமா அதிபர் ஆகிய வழக்கு விவகாரங்களில் தலையிடுவதற்கான அனுமதி கோரும் விண்ணப்பத்தை தாக்கல் செய்கிறது. இந்த சட்ட நடவடிக்கையில் மற்றைய தரப்பினரால் வைக்கப்படக்கூடிய சமர்ப்பிப்புகளிலிருந்து வேறுபட்டதும், மற்றும் இறுதியில் ஈழத் தமிழர்களின் முன்னோக்குகளை மையமாகக் கொண்டதுமான, நீதிமன்றத்திற்குப் பயனுள்ள சமர்ப்பிப்புகளைச் செய்வதற்கு, த.உ.கு (TRG) இதன் மூலம் அனுமதி கோரும்.
நீதிமன்றத்தின் முன் அரசியலமைப்புக்கெதிரான இரண்டு சவால்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம் 2021 அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், அச்சட்டம் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தை மீறுகிறது என்றும், தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்கும் அச்சட்டத்தை இயற்றும் போது, ஒன்ராரியோ மாகாணம் தனது அதிகார வரம்பினை மீறிச் செயற்பட்டுள்ளது என்றும் – இலங்கைக் கனேடியர் நடவடிக்கைக் கூட்டமைப்பின் சவால் மற்றும் நெவில் ஹேவகே சவால் ஆகிய இரண்டும் வாதிடுகின்றன. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஆனால் தனித்தனியான இந்த இரண்டு சட்ட நடவடிக்கைளிலும் தலையிடுவதற்கான அனுமதியை த.உ.கு (TRG) கோருகிறது.
“1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின், தமிழர்களுக்கு எதிரான ‘இனப்படுகொலைச் செயல்கள்’ ஆரம்பித்தன என்பதை அங்கீகரிக்கும் முதலாவது சர்வதேச சட்டம் என்ற வாதத்தின் பிரகாரம், புதிதாக இயற்றப்பட்ட ஒன்ராரியோவின் சட்டம் ஈழத் தமிழர்களுக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கும் மிகுந்த ஈடுபாட்டைக் கொடுக்கும் ஒன்றாகும். ஸ்ரீலங்கா இன்று சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில், இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஒரு தேசமாகவே இருக்கிறார்கள், அதே சமயம் புலம்பெயர்ந்தோர் தமிழ் இனப்படுகொலையால் சந்ததிகளுக்கிடையேயான மனவுழைச்சலுடன் போராடுகிறார்கள். எனவே, உலக வரலாற்றில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை மற்றும் பிற இனப்படுகொலைகள் குறித்து ஒன்ராரியர்கள் மற்றும் அனைத்து கனேடியர்களுக்கும் தொடர்ந்து கல்வி கற்பிக்க இந்தச் சட்டத்தையும், அதைச் சாத்தியப்படுத்திய பல சமூக அமைப்புகளின் கடின உழைப்பையும் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வது அவசியம்.” என தமிழர் உரிமைக்கான குழுமத்தின் தலைவர் நவரத்தினம் சிறீ நாராயணதாஸ் தெரிவித்தார்.
எனவே, தமிழ் ஒன்ராரியர்கள் இந்த விடயத்தில் கொண்டிருக்கும் தீவிர ஈடுபாட்டைக் கருத்திற் கொண்டு, த.உ.கு (TRG) இந்த இரண்டு விடயங்களிலும் தலையிடுவதற்கான அனுமதியைக் கோருவதற்கு கொடார்ட் உடன் சண்முகநாதன் எல்.எல்.பி (நட்டம் வரையறுக்கப்பட்ட கூட்டுமுயற்சி) இன், ஜனனி சண்முகநாதனை சட்ட ஆலோசகராக அமர்த்தியுள்ளது. செல்வி சண்முகநாதன் ஒரு குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு சட்ட வழக்கறிஞர் ஆவார். கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராக இருந்த அவர், ஒன்ராரியோ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட மேல்முறையீடுகளில் வாதிட்டுள்ளார். நீதிமன்றிற்கு வெளியில், செல்வி. சண்முகநாதன், ஓஸ்கூட் ஹோல் சட்டப் பள்ளியில் இணைப் பேராசிரியராகவும் சட்டக் கல்வித் திட்டங்களில் அடிக்கடி பேசும் பேச்சாளராகவும் உள்ளார். மேலும், “கனேடியன் லோயர்ஸ்” இதழ் 2021 இன் சிறந்த, 25 செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருமதி.சண்முகநாதன், செயற்பாட்டாளர்களுக்கான பல விருதுகளையும் வென்றுள்ளார்.
இந்த விடயங்களில் த.உ.கு (TRG) இன் தலையீட்டை ஆதரிக்க ஆர்வமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் அல்லது +1 (647) 833-2674 என்ற தொலைபேசி எண்ணில் ஹரன் விஸ்வநாதனைத் தொடர்பு கொள்ளலாம்.
எமது விடுதலை எமது கையில்!
அனைத்து ஊடக விசாரணைகளுக்கும்: கற்பனா நாகேந்திரா, செயலாளரும் பேச்சாளரும் [email protected] | + 1 (778) 870-5824