September 25, 2023
For Immediate Release
Markham, Canada –
On September 6, 2023, the UN Human Rights Council released the written update (A/HRC/54/20) from the High Commissioner on the situation of human rights in Sri Lanka, pursuant to its resolution 51/1.
We appreciate the UN High Commissioner’s report’s calls for deeper institutional reforms and tangible actions in accountability, reconciliation, and human rights. We also commend the inclusion of the commemoration of the 40th anniversary of “Black July,” the anti-Tamil pogroms. However, we remain deeply concerned that the Council has not taken stronger action to address the persistent pleas from Eelam Tamils living in their traditional homelands on the island, as well as from the global diaspora, who continue to advocate for referring Sri Lanka to the International Criminal Court (ICC) for war crimes, crimes against humanity, and genocide committed against the Tamil people.
During this session, the Tamil Rights Group (TRG) actively advocated for transitional justice mechanisms and expressed support for the renewal of the resolution next year. Among TRG’s efforts during this session, it:
- provided comprehensive input into a written statement submitted on August 12 by the Alliance Creative Community Project on the Current Situation of Eelam Tamils in Sri Lanka, highlighting the lack of efforts to bring justice regarding enforced disappearances and the exhumation of mass graves. Additionally, the statement addressed the draconian Anti-terrorism Bill and the ongoing militarization and cultural destruction in Sri Lanka.
- submitted two oral statements under Item 2 – Interactive dialogue on the report of the Office of the High Commissioner for Human Rights (OHCHR) on promoting reconciliation, accountability, and human rights in Sri Lanka, urging member states to appoint a special rapporteur and enhance the mandate of the Sri Lanka Accountability Project.
- presented two oral statements on September 13, under Item 2 – General debate on the oral update by the High Commissioner, urging member states to engage in the investigation and prosecution of international crimes using universal jurisdiction and to appeal to the Sri Lankan government to sincerely investigate the mass graves
- met with representatives of country missions, specifically those of the Core-Group, to advocate for an independent investigation mechanism.
- met with the Sri Lanka Accountability Project team at the Office of the United Nations High Commissioner for Human Rights to discuss collaborative efforts and strategies aimed at advancing justice and accountability.
- held meetings with representatives of non-governmental organizations to provide updates on the current situation in the North and East of Sri Lanka.
“The 54th regular Session of the UN Human Rights Council has provided the Tamil Rights Group yet again with a valuable opportunity to accumulate experience on our advocacy journey. This experience ranges from gaining insights into the UNHRC’s operations to establishing connections with influential decision-makers and collaborating with fellow activists from the diaspora and the homeland, all in our quest for justice and accountability for our community.” – Navaratnam Srinarayanathas, President, Tamil Rights Group
For all media enquiries: Katpana Nagendra | + 1 778 870-5824 | [email protected]
_______________________________________________________________________________________________________________________________________________________________________________
மனித உரிமைகள் பேரவையின் 54வது வழக்கமான அமர்வில் தமிழர் உரிமைக் கான குழுமம் – நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக எடுத்துரை-வாதிடுகின்றது
உடனடி வெளியீட்டுக்காக
செப்டம்பர் 25, 2023
மாக்கம், கனடா – செப்டம்பர் 6, 2023 அன்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த 51/1 தீர்மானத்திற்கு இணங்க உயர்ஸ்தானிகரிடமிருந்து எழுத்துப்பூர்வ (A/HRC/54/20) நிலவரதகவல் வெளியிட்டது.
ஆழமான நிறுவன சீர்திருத்தங்களையும், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள்சார் உறுதியான நடவடிக்கைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் அழைப்புகளை நாங்கள் பாராட்டுகிறோம். தமிழர் விரோதப் படுகொலைகளான “கருப்பு ஜூலை” யின் 40 வது ஆண்டு நினைவேந்தலை உள்ளடக்கியதையும் நாங்கள் பாராட்டுகிறோம். எவ்வாறாயினும், போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை போன்ற தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பாரபடுத்தவேண்டும் என்று தொடர்ந்து வாதிடும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் மற்றும் தீவினில் தங்கள் பாரம்பரிய தாயகத்தில் வாழும் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய பேரவை வலுவான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் இருக்கிறோம்.
இந்த அமர்வின் போது, தமிழர் உரிமைக்கான குழுமம் (TRG) நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளுக்காக தீவிரமாக வாதிட்டதுடன், அடுத்த ஆண்டு தீர்மானம் புதுப்பிக்கப்படுவதற்கு ஆதரவையும் தெரிவித்தது.
இந்த அமர்வின் போதான TRG இன் முயற்சிகளில்:
- இலங்கையில் ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைமை குறித்து அலையன்ஸ் கிரியேட்டிவ் கொம்மூனிற்றி ப்றொஜெக்ட் மூலம் ஆகஸ்ட் 12 அன்று சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையில் விரிவான உள்ளீட்டை வழங்கியது. அந்த அறிக்கையில் வலிந்து காணாமலாக்கல், மற்றும் மனித புதைகுழி தொடர்பான நீதிக்கான குறைந்த முயற்சிகள் தொடர்பாகவும் மேலும் கொடூரமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் இராணுவமயமாக்கல் மற்றும் கலாச்சார அழிவு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இரண்டு வாய்மொழி அறிக்கைகளுக்காக, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) ஊடாடும் உரையாடல் அமர்வின் உருப்படி 2இல், உறுப்பு நாடுகளை இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் (SLAP) ஆணைகளை மேம்படுத்தும்படியும் விசேட அறிக்கையாளரை (special rapporteur) நியமிக்குமாறும் வலியுறுத்தபட்டது.
- செப்டம்பர் 13 அன்று இரண்டு வாய்மொழி அறிக்கைகள், உயர் ஸ்தானிகரின் வாய்வழி நிலவரதகவல் பற்றிய பொது விவாதத்தில், உருப்படி 2 இன் கீழ் சமர்பிக்கபட்டன- உறுப்பு நாடுகளை உலகளாவிய நீதியதிகார (UJ) வரம்பைப் பயன்படுத்தி சர்வதேச குற்றங்களின் விசாரணைகளிலும் வழக்குதொடரிலும் ஈடுபடுமாறு வலியுறுத்துதியும், மனித புதைகுழிகளை தோண்டி எடுப்பதில் இலங்கை அரசாங்கத்தின் நடந்துகொண்டிருக்கும் தொடர்ச்சியான தயக்க-தோல்விக்கு முறையீடு செய்ய வலியுறுத்தியும் உரையாற்றபட்டத.
- சுதந்திரமான விசாரணைப் பொறிமுறைக்காக வாதிடுவதற்காக, சபையின் நாட்டுப் பணிகளின் பிரதிநிதிகளுடன், குறிப்பாக Core-Group பிரதிநிதிகளுடன் உரையாடபட்டது.
- ஐநா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டக் (SLAP) குழுவை சந்தித்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட கூட்டு முயற்சிகள் மற்றும் உத்திகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
- இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் தற்போதைய நிலவரதகவல்களை வழங்குவதற்காக அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்புகள் நடாத்தபட்டது வழங்கியிருக்கின்றது.
“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54வது வழக்கமான அமர்வு, தமிழர் உரிமைககான் குழுமத்திற்கு மீண்டும் ஒரு பெறுமதியான வாய்ப்பை எங்கள் எடுத்துரை-வாதிடல் பயணத்தில் அனுபவத்தைக் குவிக்கஇந்த அனுபவம் UNHRC இன் செயல்பாடுகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவது முதல் செல்வாக்கு மிக்க முடிவெடுப்பவர்களுடன் தொடர்புகளை செயல்படுத்தவும் புலம்பெயர் மற்றும் தாயக சக செயல்பாட்டாளர்களுடன் ஒத்துழைப்பது வரை, எங்கள் சமூகத்திற்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தேடலிற்கான பயணம் ஆகின்றது.” – நவரத்தினம் சிறீ நாராயணதாஸ், தலைவர், தமிழர் உரிமைக் குழுமம்
தமிழ் ஊடக விசாரணைக்கு: கற்பனா நாகேந்திரா, செயலாளரும் பேச்சாளரும்| [email protected], + 1 (778) 870-5824