April 18, 2023
For Immediate Release
Markham, Canada – Today, The Tamil Rights Group (“TRG”) filed its factum intervening at the Court of Appeal for Ontario (“OCA”) in the matters of Sri Lankan Canadian Action Coalition et al. v. Her Majesty the Queen in Right of Ontario and Neville Hewage v. Attorney General of Ontario (collectively, the “Applicants”). The appellate has permitted TRG leave to intervene in these constitutional challenges against Tamil Genocide Education Week Act, 2021 (“TGEWA”).
On June 28, 2022, the Honourable Judge J.T. Akbarali of the Superior Court of Justice upheld the constitutionality of the TGEWA and found that it is intra vires the province and does not violate the applicants’ ss. 2(b) or s. 15 Charter rights and appropriately dismissed both applications. However, the Appellants are appealing this decision to the OCA on the grounds that Justice Akbarali failed to address their arguments in depth and that she erred in law, misinterpreting evidence, considering irrelevant facts, and failing to consider relevant facts.
In their appeal, the Appellants continue to not only seriously misrepresent the purpose of the TGEWA but also keep making false and misleading statements on the facts surrounding the genocide of the Tamil people in Sri Lanka. By intervening in the appeal, TRG will continue to ensure that the OCA is provided with the Tamil perspective on the conflict in Sri Lanka and to show that the “acts of genocide” referred to in the Preamble to the TGEWA are rooted in facts and in the actual history.
“We are pleased to be permitted by the Court of Appeal for Ontario to intervene in these matters to make submissions based on broadly shared perspectives of Tamil Ontarians. Ontario’s Tamil Genocide Education Week Act, 2021, is arguably the first piece of international legislation that recognizes that ‘acts of genocide’ against the Tamils started in 1948 after Sri Lanka gained its independence, and so it is important that we protect it to continue educating Ontarians and all Canadians about what happened and continues to happen to Eelam Tamils in Sri Lanka.” – Navararatnam Srinarayanathas, President, Tamil Rights Group
TRG continues to be represented by Janani Shanmuganathan of Goddard & Shanmuganathan LLP.
For all media enquiries: Katpana Nagendra | + 1 778 870-5824 | [email protected]
தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டம் (த.இ.க.வா.ச) 2021ற்கு எதிராக ஒன்ராறியோவின் அரசியலமைப்பினைச் சவாலுக்குட்படுத்தி நடந்து கொண்டிருக்கும் வழக்கினில் குறுக்கீட்டாளராக தமிழ் உரிமைக் குழு உண்மை ஆதாரங்களைத் தாக்கல் செய்தது.
உடன் வெளியீட்டுக்காக
சித்திரை 18, 2023
மார்க்கம், கனடா – ஒன்ராரியோ மீதான அதிகாரத்தினால் மேன்மை தங்கிய மகாராணியார் எதிர்; கனேடிய இலங்கையர் செயற்பாட்டுக் கூட்டமைப்பு உடன்; ஏனையோர். மற்றும், ஒன்ராரியோ சட்டமா அதிபர் எதிர் நெவில் ஹேவகே (கூட்டாக “விண்ணப்பதாரர்”), ஆகிய, வழக்குகளில், குறுக்கீட்டாளராகத் தனது ஆதாரங்களைத் தமிழர் உரிமைக்கான குழுமம், ஒன்ராரியோ மேன் முறையீட்டு நீதி மன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டம் – 2021 (“TGEWA”) ற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்குகளில் ஆதாரம் வழங்கும் குறுக்கீட்டாளர் அனுமதியை மேன் முறையீட்டு நீதி மன்றம் தமிழர் உரிமைக்கான குழுமத்திற்கு வழங்கியிருந்தது.
2022 ஆனி மாதம்; 28ம் திகதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதி, மேன்மைதங்கிய ஜே.ரி. அக்பரலி அவர்கள், தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டம் – 2021, சட்டபூர்வமாகச் செல்லுபடியானது என்பதை உறுதி செய்ததுடன் ஒன்ராரியோ மாகாணமானது, வழக்குத் தொடுநர்களது ss. 2(b) அல்லது s. 15> சாசன உரிமைகளை மீறவில்லை எனத் தீர்ப்பளித்து அவர்களது விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்தார்.
இருப்பினும், மனு தாரர்கள், நீதிபதி அக்பரலி அவர்கள், தமது வாதங்களை ஆழமாகப் பார்க்காமல்,ஆதாரங்களைத் தவறாக வெளிப்படுத்திச்; சம்பந்தமற்ற ஆதாரங்களின் அடிப்படையில், சட்ட ரீதியாகத் தவறிழைத்துள்ளார் என்ற அடிப்படையில் ஒன்ராரியோ மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
மனு தாரர்கள் தமது முறையீட்டில், த.இ.க.வா.ச இன் நோக்கத்தைத் தவறாகச் சித்தரிப்பது மட்டுமல்லாமல், சிறீ லங்காவின் தமிழர் மீதான இனப்படுகொலையைச் சூழ்ந்திருக்கும் உண்மைகள் குறித்துத் தவறானதும் திசை திருப்பக்கூடியதுமான அறிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.
இம் மேன்முறையீட்டு வழக்கில் குறுக்கீட்டாளர்களாவதன் மூலம் தமிழர் உரிமைக்கான குழுமம், சிறீ லங்காவின் தமிழ் இனப்படுகொலை மீதான தமிழரது பார்வையை ஒன்ராரியோ மேன் முறையீட்டு நிதிமன்றத்திடம் தொடர்ந்து வழங்குவதுடன், த.இ.க.வா.ச இன் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள “இனப்படுகொலைச் செயற்பாடுகள்” உண்மையான வரலாற்றிலும், ஆதாரங்களிலும் ஊன்றியிருப்பதை உறுதி செய்யும்.
இம் மேன்முறையீட்டு வழக்கில் குறுக்கீட்டாளர்களாகிப் பரந்தளவிவிற் பகிரப்படும் தமிழர் கண்ணோட்டத்தினை, வழங்குவதற்கு ஒன்ராரியோ மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்ததையிட்டு மகிழ்வடைகிறோம்.
ஒன்ராரியோவின் “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம், 2021,” 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழர்களுக்கு எதிரான ‘இனப்படுகொலைச் செயல்கள்” ஆரம்பித்தன என்பதை அங்கீகரிக்கும், சர்வதேச வலுக் கொண்ட முதலாவது சட்டமாகும்.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு என்ன நடந்தது தொடர்ந்தும் என்ன நடந்து வருகிறது என்பது பற்றி ஒன்ராரியர்களுக்கும் அனைத்து கனேடியர்களுக்கும் கற்பிப்பதற்கு இச்சட்டத்தைப் பாதுகாப்பது முக்கியம் என்று தமிழர் உரிமைக் குழுவின் தலைவர் நவரத்தினம் சிறீநாராயணதாஸ் தெரிவித்தார்.
தமிழ் உரிமைக் குழுவானது கொடாட் உடன் சண்முகநாதன் எல்.எல.பி நிறுவனத்தைச் சேர்ந்த ஜனனி சண்முகநாதனால் தொடர்ந்தும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்
அனைத்து ஊடக விசாரணைகளுக்கும்:
கற்பனா நாகேந்திரா 1(778)870-5824 | [email protected]