March 17, 2022
For Immediate Release
Markham, Canada – The Tamil Rights Group (TRG) has been granted leave by the Superior Court of Justice to intervene as an added party in the matters of Sri Lankan Canadian Action Coalition et al. v. Her Majesty the Queen in Right of Ontario and Neville Hewage v. Attorney General of Ontario. The Attorney General of Ontario supported the proposed intervention.
As part of its intervention, TRG, through its counsel Janani Shanmuganathan, will introduce expert witness testimony on the history of the conflict in Sri Lanka and explain why the Tamil Genocide Education Week Act, 2021 is important to Tamil Ontarians. TRG’s aim is to provide the Court with a unique perspective centering the Eelam Tamil experience and to correct the factual record. The Applicants challenging the Act falsely assert that the legislation is rooted in a “Tamil-inspired” narrative of the conflict in Sri Lanka which amounts to Liberation Tigers of Tamil Eelam “propaganda”.
Responding to the Applicants’ unsuccessful attempt to bar any intervention by the Tamil community, Justice William D. Black determined that “Having themselves asserted that the factual underpinnings of the Act are false, it is not open to them [the Applicants], in my opinion, to then purport to close the door on other points of view or debate about those propositions” and that “the proposed interveners are well-positioned to make helpful contributions to the record for the applications.”
“We are pleased to be granted leave by the Court as a party to this matter in order to make submissions based on broadly shared perspectives of Canadian Tamils. The Applicants, and their respective constitutional challenges, are not only seriously misrepresenting the Act but are also making patently false and misleading assertions about the facts surrounding the genocide of Eelam Tamils in Sri Lanka. This is why we strongly feel it is important that the community voice is heard correctly by the Court,” stated Navaratnam Srinarayanathas, President, Tamil Rights Group.
TRG also welcomes the inclusion of another Tamil coalition – made up of the National Council of Canadian Tamils, the Canadian Tamil Academy, and the Canadian Tamil Youth Alliance – as an added party to these matters.
Those interested in supporting TRG’s intervention in these matters can contact Haran Viswanathan.
For all media enquiries: Jaskaran Singh Sandhu | + 1 647-990-8720 / [email protected]
பங்குனி 3, 2022
உடன் வெளியீட்டுக்காக
தமிழர் உரிமைக்கான குழுமத்திற்கு, ஒன்ராரியோவின், தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டம் 2021ற்கு எதிரான அரசியலமைப்புச் சவால்களில் தலையீட்டு விடுப்பிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மார்க்கம், கனடா – இலங்கை கனேடிய செயற்பாட்டுக் கூட்டணியுடன் ஏனையோர் எதிர் ஒன்ராரியோவின் மேலுள்ள அதிகாரத்தினால் மேன்மை தங்கிய மகாராணி, மற்றும் ஒன்ராரியோ சட்டமா அதிபா் எதிர் நெவில் ஹேவகே, ஆகிய இரண்டு வழக்குகளிலும் மேலதிக தரப்பாகத் தலையிடுவதற்கு, தமிழர் உரிமைக்கான குழுமத்திற்கு (TRG) உயர் நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்ராரியோவின் சட்டமா அதிபரும் தலையீட்டினை ஆதரித்துள்ளார்.
தமிழர் உரிமைக்கான குழுமம், தனது தலையீட்டின் ஒரு பகுதியாக, அதன் வழக்கறிஞர் ஜனனி சண்முகநாதன் மூலம், இலங்கையில் நடந்த மோதலின் வரலாறு குறித்த நிபுணத்துவ சாட்சியங்களை வழங்கித், தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டம் 2021, தமிழ் ஒன்ராரியர்களுக்கு ஏன் முக்கியமானது என்பதை விளக்கும்.ஈழத் தமிழரின் அனுபவத்தை மையமாகக் கொண்ட ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை நீதிமன்றத்திற்கு வழங்குவதும், எதிர்த் தரப்பால் வழங்கப்பட்டுள்ள பதிவின் உண்மைத் தன்மையைச் சரி செய்வதுமே, இவ்விடயத்தில், தமிழர் உரிமைக்கான குழுமத்தின் நோக்கமாகும். மேற்படி சட்டத்தைச் சவாலுக்கு உட்படுத்தியுள்ள விண்ணப்பதாரர்கள், இச் சட்டவாக்கத்தின் வேரானது, “தமிழின உணா்வால்” உந்தப்பட்டதான, இலங்கையில் நடந்த மோதலின் விபரிப்பாக இருப்பதனால் அது தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்திற்கு சமனானது என்று பொய்யாக உறுதிப்படுத்துகின்றனர்.
தமிழ் சமூகத்தின் எந்தவொரு தலையீட்டையும் தடுக்கும் விண்ணப்பதாரர்களின் தோல்வியுற்ற இம் முயற்சியில், பதிலளித்த நீதிபதி வில்லியம் டி. பிளக் அவா்கள், “இந்தச் சட்டவாக்கத்தின், உண்மைக்கான அடிப்படைகள் தவறானவை, என்று தாமாகவே வலியுறுத்தியதால், அது அவர்களுக்கு [விண்ணப்பதாரர்களுக்கு] திறக்கப்படமாட்டாது,அது,அந்த முன்மொழிவுகள் பற்றிய பிற கண்ணோட்டங்கள் அல்லது விவாதங்களின் கதவை மூடுவதை நோக்கமாகக் கொண்டது,என்று கருதுகிறேன்” மற்றும் “தலையீட்டாளா்களின் நிலை,பயன்பாடுகளுக்கான பதிவில் உதவிகரமான பங்களிப்புகளை வழங்கக்கூடிய வகையில் இருக்கிறது.” என்று முடிவு செய்தார்.
“கனேடியத் தமிழர்களின் பரந்த பார்வையின் அடிப்படையில் சமர்ப்பணங்களைச் சமர்ப்பிப்பதற்காக இந்த விவகாரத்தில் ஒரு தரப்பினராக இருப்பதற்கான தலையீட்டு விடுப்பு, நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது அரசியலமைப்பு சவால்கள், சட்டத்தை தீவிரமான முறையில் தவறாக சித்தரிப்பது மட்டுமல்லாமல், இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையைச் சுற்றியுள்ள உண்மைகள் குறித்து, மிகவும் தவறான வலியுறுத்தல்களை வெளிப்படையாகச் செய்கின்றன. இதனால்தான் சமூகத்தின் குரல் நீதிமன்றத்தால் சரியாகக் கேட்கப்படுவது முக்கியம் என்று நாங்கள் உறுதிபட உணர்கிறோம்.” என்று தமிழர் உரிமைக் குழுவின் தலைவர் நவரத்தினம் சிறீநாராயணதாஸ் தெரிவித்தார்.
கனேடிய தமிழர்கள் தேசிய அவை, கனடாத் தமிழ்க் கல்லூரி மற்றும் கனேடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பை உள்ளடக்கிய மற்றுமொரு தமிழ்க் கூட்டணி மேலதிகமாக, இந்த விடயங்களில் உள்ளடக்கப் படடிருப்பதையும், தமிழர் உரிமைக்கான குழுமம் (TRG) வரவேற்கிறது.
இந்த விடயங்களில் தமிழர் உரிமைக்கான குழுமத்தின் (TRG) தலையீட்டை ஆதரிக்க ஆர்வமுள்ளவர்கள் ஹரன் விஸ்வநாதனை தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் ஊடக விசாரணைகளுக்கும்:
கற்பனா நாகேந்திரா, செயலாளரும் பேச்சாளரும்
[email protected] | + 1 (778) 870-5824