June 15, 2022
For Immediate Release
Markham, Canada – The Tamil Rights Group (TRG) has submitted a Parliamentary Petition to Canada’s House of Commons in support of its Communication under Article 15 of the Rome Statute to the Office of the Prosecutor at the International Criminal Court (ICC). The Communication, which can be read in full here, requests a preliminary examination into crimes against humanity of deportation and persecution committed against Eelam Tamils within the territories of state parties to the ICC.
The Parliamentary Petition, which was presented to the House of Commons today with the support of MP Garnett Genuis (Sherwood Park—Fort Saskatchewan) and MP Jasraj Hallan (Calgary Forest Lawn), calls upon the Government of Canada, as a State Party to the Rome Statute of the International Criminal Court, and relying on the evidence and legal argumentation contained in TRG’s Article 15 Communication, to refer the Situation to the ICC so that, among other things, the Prosecutor can initiate an investigation without the need to seek authorization from a pre-trial chamber.
This Petition comes on the heels of the Canadian Parliament unanimously adopting a motion to mark May 18 of each year as Tamil Genocide Remembrance Day, as well as Canada’s recent precedent-setting move to refer the situation in Ukraine to the ICC.
“Canada has become the first national Parliament to mark a Tamil Genocide Remembrance Day and so boldly recognize what happened to Eelam Tamils as a genocide. Such recognition, however, necessitates action, which is why we are calling upon the Government of Canada to assist the Tamil community’s fight for justice, including at the ICC. By referring the Situation to the ICC, Canada can play a leadership role in ensuring that the Prosecutor initiates an investigation into crimes against humanity committed by the Sri Lankan state – similar to how Canada recently took a leadership role in referring the Situation in Ukraine to the ICC. This will also align Canada with calls from the United Nations High Commissioner for Human Rights in January 2021 which looked to member states to become involved in working to end the impunity surrounding the Sri Lankan armed conflict, both by utilising the principle of universal jurisdiction to initiate prosecutions in foreign domestic courts, and by taking steps toward seeking justice at the international level, including at the ICC. ” – Katpana Nagendra, Secretary and Spokesperson, Tamil Rights Group
“Motions in the House of Commons are only meaningful if they lead to concrete action. We have seen a number of unanimous consent motions related to the rights of Tamils in Sri Lanka adopted in the House of Commons, but the government has failed to follow that up with advocacy at the international level. This petition seeks to push the government from statement to action.” – MP Garnett Genuis (Sherwood Park—Fort Saskatchewan) and MP Jasraj Hallan (Calgary Forest Lawn)
For all media enquiries: Jaskaran Sandhu | + 1 647-990-8720 | [email protected]
உடனடி வெளியீட்டுக்கு
1 ஆனி, 2022
தமிழ் உரிமைக் குழுவின் மனு கனடிய பாராளுமன்றத்தில் சமா்பபிக்கப்பட்டது
மார்க்கம், கனடா – சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ஐ.சி.சி) வழக்குரைஞரின் அலுவலகத்திற்கு ரோம சாசனத்தின் 15 வது பிரிவின் கீழ் வழங்கிய தனது தகவல்தொடர்பாடலுக்கு ஆதரவாக நாடாளுமன்ற விண்ணப்பம் ஒன்றை தமிழ் உரிமைக் குழு (TRG) கனடிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இங்கு முழுமையாக வாசிக்கப்படக்கக்கூடிய இத் தொடர்பாடல் ஐ.சி.சியின் அங்கத்துவ நாடுகளின் எல்லைகளுக்குள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட நாடு கடத்தல் மற்றும் துன்புறுத்தல் போன்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய பூர்வாங்க ஆய்வொன்றைக் கோருகிறது.
கனடா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம சாசனத்துக்கு ஒப்புதல் வழங்கிய நாடுகளில் ஒன்று என்ற வகையிலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ரோம சாசனத்தின் 15ம் பிரிவின்படி, த.உ.கு வழங்கிய தொடா்பாடலில் உள்ளடக்கப்பட்டுள்ள சட்ட வாதங்கள் மற்றும் ஆதாரங்கள் மீதுள்ள நம்பிக்கையினாலும், ஐ.சி.சி இற்கு நிலைமையை பாரப்படுத்துதல், ஏனைய விடயங்களுடன், முன் விசாரணை மன்றின் அதிகாரம் பெறவேண்டிய தேவையின்றி, வழக்குரைஞா் விசாரணையைத் தொடங்கலாம் என, பாராளுமன்ற உறுப்பினர்களான கார்னெட் ஜெனுயிஸ் (ஷேர்வுட் பார்க்-ஃபோர்ட் சஸ்கற்சுவான்) மற்றும் ஜஸ்ராஜ் ஹாலன் (கல்கரி ஃபொறஸ்ற் லோன்) ஆகியோரின் ஆதரவுடன் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பாராளுமன்ற மனு, கனடிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாகக் குறிக்கும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதற்கும், உக்ரைனின் நிலைமையை தமிழ் உரிமைக் குழுவின் மனு கனடிய பாராளுமன்றத்தில் சமா்பபிக்கப்பட்டது
ஐ.சி.சி.க்குக் பாரப்படுத்தும் கனடாவின் சமீபத்திய முன்னுதாரண நகர்வின் பின்னணியிலும் இந்த மனு வருகிறது.
“தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை குறிப்பிட்டும் ஈழத் தமிழர்களுக்கு நடந்ததை ஒரு இனப்படுகொலை என்று தைரியமாக அங்கீகரித்ததுமான முதல் தேசிய பாராளுமன்றமாக கனடா விளங்குகிறது. எவ்வாறாயினும், அத்தகைய அங்கீகாரத்திற்கு நடவடிக்கை தேவைப்படுகிறது, அதனால் தான் ஐ.சி.சி உட்பட தமிழ் சமூகத்தின் நீதிக்கான போராட்டத்திற்கு உதவ வேண்டுமெனக் கனடிய அரசாங்கத்தை நாங்கள் அழைக்கிறோம். சமீபத்தில் உக்ரைனில் உள்ள நிலைமையை ஐ.சி.சி. இற்குப் பாரப்படுத்துவதில் கனடா எவ்வாறு தலைமைப் பாத்திரத்தை எடுத்ததோ அதுபோல சிறீ லங்கா அரசால் இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த நிலைமையை ஐ.சி.சி. இற்குப் பாரப்படுத்துவதன் மூலம், வழக்குரைஞர் விசாரணையைத் தொடங்குவதை உறுதி செய்வதில் கனடா தலைமைப் பாத்திரத்தை வகிக்க முடியும். இது உலகளாவிய நியாயாதிக்கக் கோட்பாட்டின்படி வெளிநாடுகளிலுள்ள உள்ளூர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல், மற்றும் ஐ.சி.சி உட்பட சர்வதேச அளவில் நீதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இலங்கை ஆயுத மோதலைச் சுற்றியுள்ள தண்டனையின்மைக்கு முடிவு கட்டும் பணியில் உறுப்பு நாடுகளை ஈடுபடுத்தும் நோக்கிலான, 2021 ஜனவரியின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அழைப்புகளுடன் கனடாவை இணைக்கும். ” – கற்பனா நாகேந்திரா, செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர், தமிழ் உரிமைக் குழு
“நாடாளுமன்றப் பிரேரணைகள் உறுதியான நடவடிக்கைக்கு வழிவகுத்தால் மட்டுமே அவை அர்த்தமுள்ளதாக இருக்கும். சிறீ லங்காவில் தமிழர்களின் உரிமைகள் தொடர்பாகப் பல ஒப்புதல் பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் அவற்றைத் தொடா்ச்சியாகப் பரிந்துரைக்கத் தவறிவிட்டது. இந்த மனு அரசாங்கத்தை அறிக்கைகளிலிருந்து நடவடிக்கைக்குத் தள்ள முயல்கிறது.” – பா.உ. கார்னெட் ஜெனுயிஸ் (ஷேர்வுட் பார்க்-ஃபோர்ட் சஸ்கற்சுவான்) மற்றும் பா.உ. ஜஸ்ராஜ் ஹாலன் (கல்கரி ஃபொறஸ்ற் லோன்)
அனைத்து ஊடக விசாரணைகளுக்கும்:
ஜஸ்கரன் சாந்து
[email protected] | + 1 647-990-8720