For Immediate Release
January 18, 2021
Markham, Canada – Tamil Rights Group (TRG) welcomes the historic joint statement released by elected representatives of opposition Tamil parties, leaders of Tamil civil society, and Tamil survivors calling upon member states of the United Nations Human Rights Council (UNHRC) to take decisive action against Sri Lanka at the upcoming 46th session. We also call upon the Core Group on Sri Lanka at the UNHRC – most notably Canada, Germany, and the United Kingdom – to pay heed to this unified appeal and ensure that a new Resolution is passed next month that will accelerate the pace of achieving accountability and justice for the Tamils of Lanka.
The statement, released during Thai Pongal, plainly calls out the abject failure of the Government of Sri Lanka since the end of the war to meaningfully address violations of international humanitarian and human rights law, ensure accountability of those who committed such grave international crimes, and ensure transitional justice and reparations for survivors that will guarantee non-recurrence. The signatories point to more than a decade of little to no action by successive Sri Lankan governments, irrespective of the majoritarian Sinhala party in power, since the first report by the special Panel of Experts appointed by the UN Secretary General soon after the war ended in 2009 and through various UNHRC resolutions that Sri Lanka itself co-sponsored throughout the intervening decade culminating in Resolution 40/1 in March 2019.
As the statement notes, successive Sri Lankan regimes have been categorical in pledging that they would protect the country’s armed forces from any domestic or international prosecution despite overwhelming evidence in support of it. In fact, the new Gotabaya Rajapaksa regime has not only withdrawn from Resolution 30/1 that Sri Lanka first co-sponsored in 2015 but has also officially turned down the invitation to co-sponsor any Resolution in the upcoming session. Within this intractable context, the signatories have strongly urged the UNHRC’s member states to finally acknowledge, by way of a final Resolution, that no domestic or hybrid mechanisms can “genuinely deal with accountability in Sri Lanka” and not have the Council be further misdirected by any empty promises of new domestic measures that the Sri Lankan government may make in the weeks leading up to the upcoming session.
The statement is also a milestone because it is the very first instance when all opposition Tamil parties have formally requested the UNHRC to enact a new Resolution that charges the Sri Lankan state with genocide, crimes against humanity and war crimes against the Tamils of Lanka and to ensure accountability and transitional justice through other realistic means, including referral to the International Criminal Court and the establishment of an International Independent Investigatory Mechanism (IIIM) amongst other measures. This landmark recognition of genocide by all opposition Tamil parties is especially important as Tamil survivors and civil society organisations have – at the cost to their own security and livelihoods – long agitated for it since the structural genocide of the Tamil people is what caused the war and is not the result of it. Indeed, the genocide continues unabated since the end of the war, with the latest act of Tamil erasure being the demolishing of the Mullivaikal memorial shrine at the University of Jaffna last week.
While this ongoing genocide of the Tamils of Lanka is the most egregious manifestation of Sinhala-Buddhist hegemony, its underpinning ideology now also targets Muslims, continues to deny the rights of political prisoners, criminalises LGBT people, denies fair wages for tea plantation workers, and distracts the vulnerable working class within the Sinhalese population who are starting to feel the impact of the real possibility of Sri Lanka’s sovereign default. This ethnocracy has also enabled the Rajapakse family to further consolidate their totalitarian authority through recent amendments to the already flawed Sri Lankan Constitution thereby further eroding the expectations about Sri Lanka’s constitutional obligations under the Indo-Lanka Accord of 1987. Against this backdrop, only the international community’s decisive action to ensure transitional justice, and ultimately a lasting political solution, for the Tamil people can truly engender meaningful reconciliation, development, and shared prosperity for all communities who inhabit the island.
We call upon the international community to take decisive action now so that justice is no longer delayed and denied to the survivors of the Tamil genocide in Sri Lanka. As we urged last week, we reiterate the need for broad parliamentary consensus in Canada, Germany, and the United Kingdom as meaningful demonstration of solidarity with their Tamil constituents as well as re-engagement by the United States and stronger emphasis by India, which will strengthen our collective efforts to advocate for the rights of the Tamils of Lanka more judiciously at the UNHRC and beyond it.
இலங்கையின் தமிழர்களின் ஒன்றுபட்ட கோரிக்கைக்குச் செவிமடுத்து இலங்கை அரசுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழர் உரிமைக்கான குழுமம் அனைத்துலக சமூகத்தை வேண்டுகிறது
உடனடி வெளியீட்டிற்கு
18 தை 202
மார்க்கம், கனடா – ஐக்கிய நாடுகளின் எதிர்வரும் 46வது அமர்விலே, இலங்கைக்கு எதிராகத் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்திருக்கும் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தமிழ்க் குமுக அமைப்புகளின் தலைவர்கள், பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஆகியோரின் ஒன்றிணைந்த அறிக்கையைத் தமிழர் உரிமைக்கான குழுமம் வரவேற்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையியிலே இலங்கை மீது அக்கறை செலுத்தும் நாடுகள் – குறி;ப்பாக கனடாவும், ஜேர்மனியும், ஐக்கிய இராட்சியமும் – இந்த ஒருங்கிணைந்த கோரிக்கைக்குச் செவிமடுத்து, இலங்கையிலே பொறுப்புக்கூறலையும், தமிழர்களுக்கான நீதியையும் அடைந்துகொள்வதற்கான வேகத்தைத் துரிதப்படுத்தும் வகையிலான புதிய தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டுமென நாம் கோரிக்கை விடுக்கிறோம்.
அனைத்துலக மனிதநேய மற்றும் மனித உரிமைச் சட்டமீறல்கள், அத்தகைய பாரதூரமான அனைத்துலகக் குற்றச்செயல்களைப் புரிந்தவர்களுக்கான பொறுப்புக்கூறல், நிலைமாறு நீதியையும் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்வழங்கலையும் உறுதிசெய்து மீழ்நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் ஆகிய எந்த விடயங்களிலும் இலங்கை அரசானது போர் முடிவடைந்தபின் ஆக்கபூர்வமாக எதையும் செய்யத் தவறிவிட்டது என்பதை, தைப்பொங்கலன்று வெளியிடப்பட்ட அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது. 2009லே போர் முடிந்தவுடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தால் ஏற்படுத்தப்பட்ட வல்லுனர்கள் குழுவினால் வெளியிடப்பட்ட முதலாவது அறிக்கை முதல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் – இலங்கை அரசும் இணைந்து கைச்சாத்திட்ட – பல்வேறு தீர்மானங்கள், மற்றும் மார்ச் 2019லே எட்டப்பட்ட 40/1 தீர்மானம் வரையான இடைப்பட்ட பத்தாண்டுகளிலே இலங்கையில்; தொடர்ந்து ஆட்சிக்குவந்த அரசுகள் – அவை எந்தப் பெருப்பான்மைச் சிங்களக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் – எந்தத் தீர்மானத்தின்மீதும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளெதையும் எடுக்கவில்லையென அறிக்கையிலே கையொப்பமிட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தண்டனை வழங்குவதற்கான பெருமளவு ஆதாரங்கள் இருந்தபோதும், எந்த உள்நாட்டு அல்லது அனைத்துலகத் தண்டனைகளிலிருந்தும் ஆயுதப்படையினரைத் தாம் காப்பாற்றப்போவதாக அடுத்தடுத்துவந்த இலங்கை அரசுகள் தெளிவாக உறுதிவழங்கிவந்துள்ளமையை அறிக்கை குறிப்பிடுகிறது. உண்மையிலே, கோத்தபாய இராஜபக்சவின் தற்போதைய அரசானது 2015ல் இலங்கையும் இணைந்து கைச்சாத்திட்ட 30/1 தீர்மானத்திலிருந்து வெளியேறியுள்ளதோடு, எதிர்வரும் அமர்விலே எட்டப்படும் தீர்மானத்திலே கைச்சாத்திட விடுக்கப்பட்ட அழைப்பையும் நிராகரித்துள்ளது. இந்த மறுக்கமுடியாத சூழ்நிலையிலே, எந்த உள்நாட்டுப் பொறிமுறையோ அல்லது கூட்டுப்பொறிமுறையோ இலங்கையிலே பொறுப்புக்கூறலை நியாயமான முறையில் அணுகமுடியாதென்பதை ஐக்கிய நாடுகள் அனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் இறுதித் தீர்மானம் ஒன்றை ஏற்படுத்துவதன்மூலம் அங்கீகரிக்க வேண்டுமெனவும், எதிர்வரும் அமர்வுக்கு முன்னதாக இலங்கை அரசு உள்நாட்டு முன்னெடுப்புகள் பற்றி வழங்கக்கூடிய எந்த வெற்று உறுதிமொழிகளாலும் சபையானது மேலும் திசைதிருப்பப்படாமல் இருக்கவேண்டுமெனவும் அறிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
இலங்கையின் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கும், மானிடத்திற்கெதிரான குற்றங்களுக்கும், போர்க்குற்றங்களுக்கும் இலங்கை அரசின்மீது குற்றஞ்சுமத்தவேண்டுமெனவும், அனைத்துலக நீதிமன்றத்திடம் முறையிடல் மற்றும் அனைத்துலக சுயாதீனமான புலனாய்வுப் பொறிமுறையொன்றை ஏற்படுத்தல் உள்ளிட்ட அர்த்தபூர்வமான வழிமுறைகள் மூலம் பொறுப்புக்கூறலையும் நிலைமாறு நீதியையும் உறுதிசெய்யவேண்டுமெனவும் அனைத்துத் தமிழ் எதிர்க்கட்சியினரும் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையை உத்தியோகபூர்வமாக வேண்டியுள்ளமை இதுவே முதல்முறை என்பதால் இந்த அறிக்கையானது ஒரு மைற்கல்லாக அமைந்துள்ளது. போர் இனப்படுகொலைக்கு இட்டுச்செல்லவில்லை. மாறாக, தமிழர்கள் மீதான கட்டமைப்புரீதியான இனப்படுகொலையே போருக்கு வழிவகுத்தது என்பதால், உயிர்;பிழைத்த தமிழர்களும் குமுக அமைப்பினரும் – தமது சொந்தப் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் பணயம்வைத்து – இனப்படுகொலை அங்கீகரிக்கப்படவேண்டும் எனப் பலகாலமாகப் போராடிவந்துள்ள நிலையிலே, அனைத்துத் தமிழ் எதிர்க்கட்சியினரும் இனப்படுகொலையை அங்கீகரித்துள்ள இந்த வரலாற்று நிகழ்வானது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகிறது. போரின்பின்னரும் எந்தவித தங்குதடையுமின்றி இனப்படுகொலை தொடர்கிறதென்பதும், தமிழரின் இருப்பை அழிக்கும் மிக அண்மிய செயற்பாடாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தின் அழிப்பு அமைந்திருக்கிறது என்பதுமே உண்மை.
தமிழர்கள்மீதான தொடரும் இந்த இனப்படுகொலையே சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தின் மினமோசமான வெளிப்பாடு என்றபோதும், அதன் அடிப்படையான கொள்கைககள் தற்போது முஸ்லிம் மக்களைக் குறிவைக்கவும், அரசியல் கைதிகளின் உரிமைகளைத் தொடர்ந்தும் மறுக்கவும், தற்பாலினரையும் மாற்றுப்பாலினரையும் குற்றவாளிகளாக்கவும், தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை மறுக்கவும், சிங்கள மக்களிடையே பாதிப்படையக்கூடிய நிலையிலுள்ள உழைக்கும் மக்கள் தற்போது இலங்கையின் சுதந்திர நிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணரத்தொடங்காமல் அவர்களின் கவனத்தைச் சிதைக்கவும் முனைகிறது. ஏற்கனவே குறைபாடுகளைக்கொண்டிருந்த இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு அண்மையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் மூலம் இராஜபக்ச குடும்பத்தினர் தமது எதேச்சாதிகார அதிகாரங்களைக் கூட்டிக்கொள்ளவும், அதன்மூலம், 1987ன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அரசமைப்புச் சட்டம் தொடர்பான எதிர்பார்ப்புகளை மேலும் பலவீனப்படுத்தவும் இந்த பெரும்பான்மைவாதம் மேலும் வழிவகுத்துள்ளது. இந்தப் பின்னணியிலே, அனைத்துலக சமூகத்தின் தீர்க்கமான நடவடிக்கையொன்றே நிலைமாறு நீதியை உறுதிப்படுத்தி அதன் பேறாக தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதன்மூலம் மட்டுமே இத்தீவில் வாழும் அனைத்துமக்களும் நல்லிணக்கத்தையும், முன்னேற்றத்தையும், வளவளர்ச்சியையும் அடையமுடியும்.
இலங்கையிலே தமிழ் இனப்படுகொலையிலிருந்து உயிர்;பிழைத்துள்ளவர்களுக்கு இனியும் நீதி மறுக்கப்படுவதையோ, தாமதப்படுவதையோ தடுப்பதற்கு இப்போதே தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைத்துலக சமூகத்தை நாம் கோருகிறோம். கடந்தவாரம் நாம் கோரியதுபோலவே, கனடா, ஜேர்மனி, ஐக்கிய இராட்சியம் ஆகிய நாடுகளிலே – அந்நாடுகளின் தமிழ்க் குடிமக்களுடனான உணர்வுத்தோழமையின் வெளிப்பாடாக – நாடாளுமன்றம் தழுவிய வகையிலான கட்சிச்சார்பற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்றும், ஐக்கிய அமெரிக்கா மீண்டும் இந்த விடயத்திலே தன்னை ஈடுபடுத்தவேண்டுமென்றும், இந்தியா இதிலே மேலும் கவனஞ்செலுத்த வேண்டுமெனவும் கோருகிறோம். இதுவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலும் அதற்கு அப்பாலும் இலங்கையின் தமிழர்களுக்கான எமது ஒருங்கிணைந்த பரிந்துரைச் செயற்பாடுகளைப் பலப்படுத்தித் துரிதப்படுத்தும்.
____
Katpana Nagendra, Secretary and Spokesperson
[email protected] | + 1 (778) 870-5824